இல்லறத்தார்

161 பதினோர் நிலைமையர் சாவகர் என்று
விதியின் உணரப் படும்
 

நமது ஆகம நெறிப்படி இல்லறத்திலிருப்போர் பதினோரு நிலையினர் என்பதை உணரல் வேண்டும்.


தரிசனிகன்

162 காட்சியில் திண்ணனாய், சீல விரதம் இலான்
மாட்சிஉறு தரிசன் ஆம்.
 

நற்காட்சியில் உறுதியுடையவன், ஆனால் விரதங்களை ஏற்காதவன் தரிசனிகன்.


விரதிகன்

163

வதம் ஆஐந்தும் சீலம்ஓர் ஏழும்தரித்தான்
விதியால் விரதி எனல்.

ஐந்து அணுவிரதங்களையும் , எழு சீலங்களையும் ஏற்று ஒழுகுபவன் ஆகமப்படி விரதிகன் எனப்படுவான்.


 

சாமாயிகன்

164 எல்லியும், காலையும் ஏத்தி நியமங்கள்
வல்லியான் சாமா யிகன்.
இரவும் பகலும் ஏற்ற நேரத்தில் நாள் தவறாது ஆன்ம சிந்தனைச் செய்யும் ஆற்றலுடையோன் 'சாமாயிகன்' .

போசதுபவாசன்

165 ஒருதிங்கள், நால்வகைப் பவ்வமே, நோன்பு
புரிபவன் போசன் ஆம்.
  மாதத்தில் நான்கு திதிகளில் உண்ணாவிரதத்தை ஏற்பவன் போசதன் ஏன்னும் ' புரோசதோபவாசன்' எனப்படுவான்.