|
அச்சித்தன் |
|
| 166 |
பழம், இலை காயும், பசிய துறந்தான் அழிவுஅகன்ற அச்சித்தன் ஆம் |
|
இலை, காய், கனியாத பழங்கள் வற்றை உண்ணாது ஒதுக்கியவன் குற்றமற்ற அச்சித்தன் என்னும் ' சத்சித்த விரதனாகும்.' |
|
|
|
|
|
இரவு உண்ணான் |
|
| 167 |
இருளின் கண் நால்வகை ஊணும் துறந்தான் இராத்திரிஅ புக்தன் எனல். |
|
இரவில் நால்வகை உணவுகளில் எதையும் உண்பதில்லை என நீக்கியவன் ' இரத்திரி அபுக்தன்' எனப்படும். |
|
|
|
|
|
பிரமசாரி |
|
| 168 |
உடம்பினை உள்ளவாறு ஓர்ந்துஉணர்ந்து, காமம் அடங்கியான் பம்மன் எனல். |
|
உடலின் தன்மைகளை நன்கு உணர்ந்து காம உணர்ச்சியை அடக்கியான் பம்மன் எனும் ' பிரமசாரி' எனப்படுவான். |
|
|
|
|
|
அநாரம்பன் |
|
| 169 |
கொலைவரும் ஆரம்பம் செய்தலின் மீண்டான் அலகில் அநாரம்பன் எனல் . |
| மிகுதியான உயிர்க் கொலைக்குக் காரணமன தொழில்கள் எதையும் செய்யாதொழிந்து விட்டவன் ’ அநாரம்பன்’ எனப்படுவான். | |
|
|
|
|
அபரிக் கிரகன் |
|
| 170 |
இருதொடர்ப் பாட்டின் கண் ஊக்கம் அறுத்தான் உரியன் அபரிக் ரகன். |
| அகப்பற்றுக்களில் மனதைச் செலுத்தாது ஆர்வத்தை அடியோடு நீக்கியவன் ‘அபரிக் கிரகன்’ என்னும் நிலைக்குரியவன். | |
|
|