எடுத்துக் காட்டுகள்

151 மந்திரங்கள் ஐந்தும் மனத்துவரச் சென்றார்கள்
இந்திரற்கும் இந்திரரே என்.
 

சல்லேகனை காலத்து ஐந்து மந்திரங்கலையும் மனத்தே இருத்திச் சிந்தித்தவர்கள் ஜினேந்திர பதவியை எய்துவர்.


 

சல்லேகனையின் இறப்பு

152 சாவொடு வாழ்க்கையை அஞ்சித்தான் மெச்சுதல்
வாழ்வொடு நட்டார் நினைப்பு
 

இறப்பதற்கும், இருப்பதற்கும் அஞ்சுதலும், செருக்குறுதலும்,துய்த்த இன்பத்தை எண்ணுதலும், தொடர்புபட்டாரை நினைதலும்,


153 நிதானத் தோடு ஐந்து இறப்புமின்றி முடித்தார்
பதானம் அறுத்தார் எனல்.

தான் இந்நிலை எய்தல் வேண்டும் என எண்ணுதலும் ஆகிய ஐந்தும் அதிசாரமின்றி சல்லேகனையை முடித்தவர் பரிவைத்தனை ஐந்தினைக் கெடுத்தவராவர்.


அறத்தின் பயன்

154 அறத்துப் பயனைப் புராண வகையில்
திறத்துஉள்ளிக் கேட்கப் படும்

அறத்தினால் விளையும் ஆக்கங்களைப் புராணங்கள் முதலியவற்றில் நன்கு கற்று கேட்டு ஆராய்ந்து அறிதல் வேண்டும்.


155 பிறப்புபிணி ,மூப்பு சாக்காடு நான்கும்
அறுத்தல் அறத்தின் பயன்.
 

பிறப்பு, பிணி, மூப்பு, இறப்பு இந்நான்கினையும் ஒழிப்பதுதான் அறத்தின் பயனாகும்.