எடுத்துக் காட்டுகள்

156 பரிவு நலிவினொடு அச்சமும் இல்லை
உருவின் பிறப்புல் லவர்க்கு.
 

உடலுடன் சேர்ந்த பிறவியை ஒழித்த வீட்டுயிர்களுக்கு விருப்பு, வெறுப்பு,அச்சம் ஆகிய எதுவும் எப்போதும் இல்லை.


157 கிட்டமும் காளிதமும் நீக்கிய பொன்போல
விட்டு விளங்கும் உயிர்.
 

வீட்டுயிர்கள் அப்பழுக்கில்லாத தூய்மையான பொன்னைப் போன்று விளங்கும் தன்மை உடையவை


158

எல்லைஇல் இன்பம் உணர்வு வலிகாட்சி
புல்லும் வினைவென் றவர்க்கு.

வினைகளை வென்றவர்களிடம் எல்லையற்ற இன்பம், ஞானம், வலிமை, காட்சி விளங்கித் தோன்றும்.


159 உலக மறியினும் ஒன்று மறியார்
நிலைய நிலைபெற் றவர்

´ருக்கால் இவ்வுலகமே நிலைமாறினாலும் வீட்டுநிலை எய்தியவைகள் மீண்டும் பிறவியை எய்தமாட்டார்கள்.


160 மூவுலகத்து உச்சிச் சூளாமணி விளக்குத்
தோவகையில் சித்தி யவர்.
 

குற்றமற்ற வீட்டுலகெய்திய சித்த பரமேட்டிகள், மிக உயர்ந்த இடத்தில் உள்ள மணிவிளக்கு ஒளிருமாறு விளங்குகின்றார்கள்.