எடுத்துக் காட்டுகள்

146 இறுவைக்கண் நான்கும் பெறுவாம் என்றுஎண்ணி
மறுஆய நீக்கப் படும்.
 

இருதிகாலத்தில் அறிவு, காட்சி, பலம், சுகம் ஆகிய உயிர்த்தன்மைகளை அடைவோம் என்ற உறுதியுடன் தீய எண்ணங்களை நீக்குதல் வேண்டும்.


147 பற்றொடு செற்றமே அற்றம் தொடர்ப்பாடு
முற்றும் துறக்கப் படும்
 

ஆசை, செற்றம், சுற்றம், பற்று இவற்றை அறவே நீக்குதல் வேண்டும்


148 ஆலோ சனையின் அழிவுஅகற்றி, மாதவன்கண்
மீள்வுஇன்றி ஏற்றுக் கொளல்.

உயிர் நெறியினின்றும் மனம் மாறுபட்டுச் சென்று தான் ஏற்ற விரதத்திற்குக் குறை நேர்ந்திருந்தால் அதை ஒளிக்காமல் குருவினிடம் வெளிப்படுத்தி மீண்டும் விரதத்தில் நிலைத்ருத்தல் வேண்டும்.


149 கசிவு கலக்கம் அகற்றி மனத்தை
ஒசியாமல் வைக்க உவந்து

இளக்கமும் கலக்கமுமின்றி மனத்தை நிலையாக மகிழ்ச்சியுடன் ஆன்மத் தியானத்தில் இருத்த வேண்டும்.


உண்ணாமை- பருகாமை

150 ஊனொடு பானம் முறைசுருக்கி, ஓர்ந்தூணர்ந்து
மானுடம்பு வைக்கப் படும்
 

முறையாக உண்பதையும் பருகுவதையும் குறைத்து, மருமைக்கு உறுதியானவற்றை ஆய்ந்தறிந்துப் பெறுதற்கரிய உடலினின்று நீங்குதல் வேண்டும்.