எடுத்துக் காட்டுகள்

141 சிரிசேன், இடபமா சேனையே,பன்றி
உரைகோடல் கொண்டை, உரை.
 

ஸ்ரீசேணன், விருக்ஷப சேனை, பன்றி, கௌண்டேசர் இவர் நம் வரலாறுகள் தானங்கள் பயனுக்கு எடுத்துகாட்டுகளாம்.


விருந்தோம்பலை வீணாக்குவன

142 பசியதன் மேல்வைத்தல், மூடல், மறைத்தல்
புரிவுன்மை, எஞ்சாமை கேடு
 

ஆகாரத்தைப் பச்சையிலையில் வைப்பதும்,அதனால் மூடுவதும், பச்சைப் பொருள்களைக் கலந்து மறைவாகத் தருவதும், பற்றின்றி அளிப்பதும், காலந்தவறி கொடுப்பதும் அதிசாரங்களாகும்.


 

துறவறத்தாற்கு

 

பூசை

143 தேவாதி தேவன் திருவடிக்குப் பூசனை
ஓவாது செய்க உவந்து.

தேவாதி தேவனாகிய அருக பெருமானின் அழகிய திருவடிகளுக்கு மகிழ்ச்சியுடன் இடையறாது பூஜை முதலியவற்றைப் புரிதல் வேண்டும்.


 

வழிபாட்டின் வெற்றிக்கு சான்று

144 தெய்வச் சிறப்பின் பெருமையைச் சாற்றுமேல்
மையுறு தேரை உரை

அருக பெருமானின் அடிகலைப் பூஜிப்போர் அடையும் சிறப்பினை அறிய கரிய தவளையின் வரலாறு எடுத்துக்கட்டாகும்.


 

வடக்கிருத்தல்

 

சல்லேகனை

145 இடையூறு, ஒழிவுஇல்நோய், மூப்பு, இவைவந்தால்
கடைதுறத்தல் சல்லே கனை
 

பலவழிகளில் வரும் துன்பங்கள், தீராத னோய், மிக்க மூப்பு வை காரணமாக தொழில் புரிவதையும், உணவுகொள்வதையும் ஒழித்து நிற்றல் சல்லேகனை எனப்படும்.