136

இடர்களைதல் உற்றது செய்தலும் ஆங்கே
படும்என்ப பண்பபுடை யார்க்கு.

 

துறவியர் மேலான இல்லறத்தோர் இவர் தம் துன்பங்களைப் போக்குதல் தன் ஆற்றலுக்கேற்ப உதவுதல் ஆகியவையும் வையா விருத்யம் எனப்படும்.


உத்தம தானம்

137 உத்தமரக்கு ஒன்பது புண்ணியத்தால் ஈவது
உத்தம தானம் எனல்
 

மேலான துறவியர்க்கு ஒன்பது வகையான உயர் முறைபடி உணவளித்தல் மேன்மையான ஆகார தானம் எனப்படும்.


 

இரட்டைக் கொடைகள்

138

உத்தம தானம் தயாதானம் தம்மளவில்
வைத்துஒழியான் செய்க உவந்து.

தமது சக்திக்கேறற்ப மாமுனிவர்களுக்கு அபயமளிதல் உயிர்களுக்கு அபயமளித்தல் ஆகிய இவற்றை மகிழ்வுடன் இடையறாது செய்வார்களாக.


 

துறவியர்க்கு வழங்கலின் பயன்

139 மனைவாழ்க்கை யாலவந்த பாவம் துடைத்தல்
மனை நீத்தார்க்கு ஈயும் கொடை.

அனைத்தையும் துறந்த முனிவர்களுக்கு அளிக்கும் ஆகாரதானத்தின் பயனால் இல்வாழ்வில் நம்மையுமறியாமல் சேர்ந்த பாபங்கள் நீங்கும் என்பதாகும்.


140 தான விடயதத்தில் தடுமாற்றம் போம்துணையும்
ஈனம்இல் இன்பக் கடல்
 

இதுவரை கூறிய தானங்களினால் பிறவிப்பிணி நீங்கி வீடுபெறுகின்ற வரையில் குறைவற்ற கடல் போன்ற இன்பத்தை எய்தலாம்.