பரிமாண விரதத்தின் இயல்பு

106

வேட்கை, வழிநினைப்பு,துய்ப்பு மிகநடுக்கு,
நோக்குன்மை ஐந்தாம் இறப்பு

 

நீக்கிய பொருள்களை விரும்புவதும் அவை பெறும் வழிச் சிந்திப்பதும் அவற்றை துய்த்தலும் தளர்வதும் விரதம் நினையாமையும் அதிகாரங்களாகும்


சிக்கா விரதம்

சாமாயிகம்

107 கட்டு விடுகாறும் எஞ்சாமை ஐம்பாவம்
விட்டுஒழுகல் சாமா யிகம்
 

ஏற்றுக் கொண்ட உறுதி குலையாமல் கொலை முதலிய ஐம்பாவங்களையும் நினையாது ஆன்மத் தியானத்தில் நிலைத்தல் சாமாயிகம் எனப்படும்.


 

கட்டுகளாவன

108

கூறை மயிர்முடி முட்டி நிலையிருக்கை
கூறிய கட்டுஎன்று உணர்

ஆடைகள் அவிழாமை தலைமயிர் கலையாமை விரல் பிกขயாமை நிலை குலையாது நிற்றல் அமர்தல் கட்டு எனப்படும்.


 

சாமாயிக விரத்திற்கு உரிய இடங்கள்

109

ஒருசிறை இல்லம் பிறவுழி யானும்
மருவுக சாமா யிகம்

இல்லத்தின் ஒரு பக்கத்திலோ அல்லது வேறு அமைதியான இடங்களிலோ சாமாயிகத்தை மேற்கொளள்ள வேண்டும்.


 

சாமாயிக விரத்திற்கு உரிய காலம்

110

சேதியம் வந்தனை பட்டினி ஆதியாய்
ஓதிய காலம் அதற்கு

 

இறைவன் திருஉருவங்களை வணங்குங்கும் போதும் உபவாசம் மேற்கொள்ளும் காலத்தும் சாமாயிகம் கொள்ளுதல் வேண்டும்