 |
அடியார்க்கு நல்லார்
நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்திற்கு முதன் முதல் உரை எழுதிய
அடியார்க்கு நல்லார் வாழ்ந்த நிரம்பை என்ற பெயர் பெற்ற போ�டமும் விசய
மங்கலத்தின் அருகில் விளங்குகிறது. இவ்வுண்மையை,
"வருவிசய மங்கையும் நிரம்பையும் கூடலூர்
மருவறு சிறுக்கழிஞ்சி"
எனக் குறும்பு நாட்டு ஊர்த்தொகைப் பாடலும்
'குருவையுணர்ந்த இளங்கோவடிகளுட்
கொண்டு சொன்ன
தருவை நிகழும் சிலப்பதிகாரத் தனித்தமிழுக்கு
அருமை உரை செய் அடியார்க்கு நல்லார்
அவதா�த்து
வருமைப் பொழில் நிரம்பைப் பதியுங் கொங்கு
மண்டலமே"
எனப் போற்றும் கொங்கு மண்டல சதகமும் தெளிவாக விளக்கியுள்ளன.
அடியார்க்கு நல்லார் மோரூர் பொப்பண்ண காங்கேயன் என்ற கொங்கு நாட்டு
வள்ளலால் ஆதா�க்கப் பெற்ற ஜைன அறவோர். இப்பேராசா�யர் இலக்கிய மேதையாக
விளங்கியதுமன்றி அரசியல் மேதையாகவும் விளங்கினார். இவர்தம்
பேரறிவைக்கேட்டறிந்த ஈழத்துநாட்டு சிங்கநல்லூர் பேரரசன் இவரைத் தமது
இராஜ்ஜியத்தின் அமைச்சராக அமர்த்திக்கொண்டார். அங்குதான் அடியார்க்கு
நல்லார் சிலப்பதிகாரத் தனிக் காவியத்திற்கு உரை எழுதினர். ஆட்சித்
திறனும், சிலப்பதிக்காரச் செஞ்சொற் காவியத்திற்கு அரிய உரை எழுதிய
பெருமையும் விளங்கப் பெற்ற அப்பேராசிரியா�ன் நினைவு ஈழத்து நாட்டில்
என்றும் நின்று நிலவ அடியார்க்கு நல்லார் மண்டபம் என்றும்
அடியார்க்கும் நல்லார் குளம் என்றும் இரு சின்னங்களை அமைத்துப்
போற்றினான் சிங்க நல்லூர் பேரரசன். அந்நினைவுச் சின்னங்கள் இன்றும்;
அங்கு காட்சி அளிக்கின்றன. ஈழத்து நாட்டு அரசன் அடியார்க்கு நல்லாரை
அறிந்து சிறப்பித்தது போன்று தமிழக அரசியலாரும், புலவர்களும், பொது
மக்களும் நிரம்பை கிராமத்தில் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டாமா?
கடமையுமல்லவா? நிரம்பை கிராமம் விளங்கியவிடத்தில் ஒருகல் தூண் அமைத்து
அப் பேராசிரியா�ன் பெயரைப் பொறித்தாகிலும் நாட்டி வைக்கலாம்.
இசையும், நாடகமும்
இசையும் நாடகமும் பயிற்றுவித்த கலைக்குன்றம் விசய மங்கலத்திற்கு
சுமார் பத்து கல் தொலைவில் அறச்சலூர் என வழங்கும் ஒரு சிற்றூர்
இருக்கிறது. இவ்வூரைப் பண்டைய காலத்தில் அறச்சாலையூர் என
அழைக்கப்பட்டது. இவ்வூருக்கு அருகில் ஒரு கலை மலை காணப்படுகிறது. இம்
மலைக்கும் அறச்சலூர் மலை என்றே பெயர் வழங்கப்படுகிறது. இம்
மலையின்மேல் ஜைன அறவோர்கள் தவம் இயற்றிய சின்னங்களும் கற்படுக்கைகளும்
பிராமி எழுத்தாலான கல் வெட்டுச் செய்திகளும் காட்சி யளிக்கின்றன.
மூன்று கல்வெட்டுகளில் ஒன்றில்,
"எழுத்தும் புணர்த்தான் மணிய
வண்ணக்கன் ஆதன் சாத்தன்"
என்றும் வேறு சிதறுண்டுள்ள கல் வெட்டுச் செய்திகளுள் நாட்டியக்
குறிப்புக்கள் சிலவும் காணப்படுகின்றன. இவைகளை நன்கு ஆராய்ந்து தொல்
பொருள் ஆராய்ச்சித் துறைத் தலைவர் உயர்திரு. T.N. இராமச்சந்திரன்
M.A. F.A.S. அவர்கள் இந்துபத்திரிகை (Hindu) 20-5-1962ல் வெளியிட்டுள்ள கட்டுரையின் சுருக்கம் வருமாறு:
இக்குகை 1800 ஆண்டுகட்கு முற்பட்டது. இதன் அமைப்பு, பிராமி கல்
வெட்டுக்கள் ஜைன அறவோர் படுக்கைகள் முதலியன புதுக்கோட்டை அருகில்
உள்ள சித்தன்னவாசல் போன்றது. படுக்கையின் இரு பக்கங்களிலும் பிராமி
எழுத்துக்களில் இரண்டு கல்வெட்டுக்கள்,
சத திததி ததை த தைந
தித தித துது துதுது
ததி தாதை திதைத
தததி தாதை
திதா தாதை தா
எனப் பொறிக்கப்பட்டுள்ளன. இவைகள் பரத நாட்டியத்தில் நட்டுவனார்
மாணாக்கர்களுக்குத் ;தாளத்தோடு சொல்லிக் கொடுக்கும் அடவு இசைத் தமிழ்.
இக் கல்வெட்டுகளால் ஆதன் சாத்தன் என்ற பல்கலைக் கலைஞன் தலைவனாகவும்,
ஆசிரியனாகவும், ஆடலாசிரியனாகவும் விளங்கிய ஜைன சான்றோர் என்பது
தெளிவாகிறது. சேரலாதன் போன்று ஆதன் என்ற சொல் தலைவனைக் குறிக்கும்
எனவே இங்கு வீற்றிருந்த ஜைன முனிவர்கள் ஆசிரியர்களாகவும் பல்கலைப்
புலவர்களாகவும், தலைவர்களாகவும் விளங்கியுள்ளார்கள் என்பது
தெளிவாகிறது என எழுதியுள்ளார். கலை வல்லோரே! இம் மலை யாத்திரைக்குரிய மாண்புடையதல்லவா? அக்கலை மலைக்கும் செல்லுங்கள். தொல்பொருள் ஆராய்ச்சி
நிலையத்தாரும் அரசியலாரும் இம் மலையைப் பாதுகாப்பதுடன் மலையின்போ�ல்
செல்லுதற்கு வசதியானபடிகளை அமைத்து வழி செய்யவேண்டுமெனக் கோருகிறேன்.
திங்களுர்:- திங்களுரில் தென் எல்லையில் கோயில் தோட்டத்தில் அழகிய
புஷ்பநாதர் கோவில் விளங்குகிறது. இவ்வூரைச் சந்திரவசதி என்று சாசனம்
கூறும் கி.பி. 1045 ஆம் ஆண்டு அறத்துளான் முத்தன் பொன்னனான நானா கணித
மாணிக்கஞ் செட்டி இக் கோவிலில் ஒரு மண்டபம் கட்டினான். அதன் பெயர் 'சிங்களாந்தகன்
பதுமுக மண்டபம்' என்பது திங்களூரை ஊர்த்தொகைப் பாடல் 'பீடுபெறு
திங்களுர்' என்று போற்றுகிறது.
பூந்துறை:- சந்தைக்கு அருகே பார்சுவநாத தீர்த்தங்கரர் கோவில்
இருக்கிறது. பத்மாவதி தேவியின் அழகிய சிலை ஒன்றும் உள்ளது. சிதைந்த
கல்வெட்டுகளும் இருக்கின்றன.
வெள்ளோடு:- ஊரின் வடக்கே வயல்களிடையில் ஆதிநாதர் கோவில்
காட்சியளிக்கிறது. கோவில் மிகவும் சிதைந்துள்ளது. சந்திரநாதர்
சிலையும் காணப்படுகிறது.
மேற்குறித்த ஊர்களில் வாழ்கின்ற மக்கள் இன்றும் சமய வேறுபாடின்றி
அமணீசுவர சு�வமி என்ற பெயா�ட்டு இவ்வாலயங்களில் வழிபட்டு வருகின்றனர்.
இப் பகுதியில் சைவக் கோவில்கட்கு விடும் மானியத்திலிருந்து
ஜினாலயங்கட்கும் வழிபாடு நடத்தியாக சர்க்கார் பொ�யபாளையம் சுக்��வேசுரர்
கோவில் கல்வெட்டுக் கூறுகிறது.
(வீர பாண்டியன் கி.பி. 1273)
இறுதியாக, யான் முன்னர் வேண்டிக் கொண்டது போன்று தமிழக அரசியலாரும்,
புலவர், கவிஞர் பெருமக்களும், குறிப்பாக ஜைனப் பெருமக்களும்
விசயமங்கலத்துக் கோயிலில் திப்பணியாற்றி இலக்கிய யாத்திரைப் பதியாகச்
சிறப்பிக்குமாறு வேண்டுகிறேன். இப் புனிதப் பணியில் சிறப்பாகக் கொங்கு
நாட்டு பெருமக்கள் பங்கெடுத்துக் கொள்ளக் கடமைப்பட்டவர்கள் எனில்
மிகையாகாது. இக்கடமை கோவை கிழார் எனச் சிறப்பிக்கப்பெறும் உயர் திரு.
T.M. இராமச்சந்திரம் செட்டியார் B.A., B.L. அவர்கள் தாம் எழுதிய
கொங்கு நாடும் சமணமும் என்ற அரும்பெரும் நூலில் நோ�தின் நின்று
விளக்கியிருக்கும்
அரியவேண்டுகோளை கொங்கு நாட்டுப் பெருமக்களுக்கு நல்
விருந்தாக அளித்து முடிக்கின்றேன்.
"சமண சமயம் சமயப் பெருக்கில் மட்டும் சித்தை கொள்ளவில்லை.
நாட்டினுடைய பண்பாட்டை வளர்த்துவதற்கும் முற்பட்டிருக்கின்றன. கல்விப்
பெருக்கினாலும், காவியங்களை இயற்றி இலக்கியங்களைப் பெருக்குவதிலும்
நாட்டின் நாகா�கத்தை உயர்த்தியிருக்கின்றது. ஒப்பற்ற இலக்கியமாகிய
பெருங்கதையை தமிழ் நாட்டிற்குத் கொடுத்திருக்கின்றது. மாணவர்கள்
எளிதில் உணர்ந்து கொள்ளும் முறையில் நன்னூல் என்னும் தெளிந்த
இலக்கணத்தைப் தந்திருக்கின்றது. பேரூரைகளில் மிகச்சிறந்த உரையாகிய
அடியார்க்கு நல்லார் உரையை வெளியிட்டிருக்கின்றது. இவ்வுரை
இல்லாவிடில் பண்டைத் தமிழின் நற்கலைகளை நாம் அறிந்து கொள்ள
வகையேயில்லை. இறுதியாகக் கொங்கு நாட்டு வரலாற்று நூலாகிய கொங்கு
மண்டல சதகத்தையும் சமணசமயமே அளித்திருக்கின்றது. இவ்வாறு பலவகைப்
பட்ட முறைகளிலும் கொங்டு நாட்டுப் பண்பாட்டைச் சமண சமயம்
வளர்ந்திருக்கின்றது என அறியலாம்.
மற்ற சமயங்களாகிய சைவமும் வைணவமும் கோயில்களுடைய எண்ணிக்கைகளை
மிகுதிப் படுத்தினவேயன்றி இலக்கியப் பண்பாட்டை சமண சமயத்தைப் போல
அவ்வளவாகச் செய்யவில்லை. வைதீக சமயங்களில் பெருங்கதை போன்ற ஓர்
இலக்கியமோ, நன்னூல் போன்ற ஒரு இலக்கணமோ, அடியார்க்கு நல்லார் உரை
போன்ற ஒரு உரையோ, கொங்கு மண்டல சதகம் போன்ற ஒரு வரலாற்றுப் பிரபந்தமோ
இயற்றப்படவில்லையென்று அறிய வேண்டும். ஆகவே கொங்கு மண்டலத்திற்க்குச்
சமணசமயம் செய்திருக்கும் தொண்டு வேறு எதுவும் செய்யவில்லை என்பது
திண்ணம்.
இந்த அரிய செய்திகளை அறிந்த பின் நாட்டு மக்கள் நன்றியைக்காட்டும்
நெறியில் இருக்கவேண்டுமென்றால் ஏற்கெனவேயிருக்கும் சமணச் சின்னங்கள்
அழிந்து போகாதபடி பாதுகாத்து வைப்பதே தகுந்த கடமையல்லவா? நமது
நாட்டுமக்கள் அந்த கடமையை உணர்ந்து அச்சின்னங்களைப் போற்றுவார்களாக!
வாழ்க விசயமங்கலம்!
வளர்க கொங்குநாடு!a