 |
டாக்டர் - மு. வரதராசனார்
பல்கலைக்கழகம்-சென்னை.
"பகுத்தறி வியக்கத்தின் பழமை"
(பகுத்தறிவும் சமதர்மமும்) என்னும் தங்கள் நூல் அறிவுச் சுடர்க்குத்
தூண்டுகோலாக விளங்குகின்றது. தமிழ்நாட்டின் பெருமையையும், பழைய நாகா�கப்
பெற்றியையும் இடையே சுட்டிக் செல்வது பொருந்திய சிறப்பை நல்குகின்றது....
தங்கள் ஊக்கம் சிறந்து வளர்க!
திருவாளர்
R.P.இராமச்சந்திரன் அவர்கள்
"பகுத்தறிவியக்கத்தின் பழமை" (பகுத்தறிவும் சமதர்மமும்) முழுவதும்
படித்தேன். தமிழகத்தில் படித்தவர் பலரும் மெய்யெனக் கருதிவந்த ஆதி
பகவானைப்பற்றிய பொய்க் கதைகள் தங்கள் மெய்யுரைகளால் சுக்குநூறாகச்
சிதைக்கப்பட்டுவிட்டன. திருக்குறளின் மெய்ப்பொருளைக் காணத் தங்கள்
நூல் வழிகாட்டியாகத் திகழ்கின்றது. தனித்தன்மை (Originality) யொன்றைத்
தாங்கள் பெற்றுவிட்டிர்கள்.
மதிப்புரைகள்
"சுதேசமித்திரன்" (14-5-48)
"இந்நூலில் ஆசிரியர் திருக்குறள் கூறும் ஆதிபகவன் ஜைன சமயப்பொ�யராகிய
விருஷபதேவரே யென்றும், பல ஆராய்ச்சிகளுடன் கூறுகின்றனர். பண்டைத்
தமிழ் நூல்கள் பல, ஜைனர்களாலே ஆக்கப்பட்டதாலும், சமணக் கொள்கைகள் பல
தென்னாட்டில் பரவியிருந்தபடியாலும் தமிழ்ப்பண்பாட்டை ஓரளவு
உருப்படுத்தினவர் ஜைனர் என்பதில் ஐயமில்லை" .....
"குயில்"
பகுத்தறிவி யக்கத்தின் பழமை யென்னும்
பனுவலினைச் சிவபந்து சீ(ஸ்ரீ)பால்
மிகுந்தநலம் விளைத்துள்ளார் திராவி டர்க்கே
மேனாளில் திராவிடா�ன் மேன்மை சீர்த்தி
வகுக்கா�ய நுண்ணறிவு வாழ்வின் நேர்மை
இவற்றையெல்லாம் பழநூலின் வாயி லாகத்
தொகுத்தளித்த அறிஞர்க்கு நன்றி! சீபால்
தூயவர்தாம் பல்லாண்டு வாழி நன்றே! - பாரதிதாசன்
முன்னுரை:
பகுத்தறிவியக்கத்தின் பழைமை என்னும் இந்நூல் முதன் முதல் 1948-இல்
வெளியிடப் பெற்றது. பின்னர் சென்னை முத்தமிழ் நிலையத்தின்
உரிமையாளர்
மேல்மின்னல் திரு. A. சக்கரவர்த்தி நைனார் அவர்கள் 1950ஆம் ஆண்டில்
இரண்டாம் பதிப்பாக வெளியிட்டு உதவினார். தற்போது குன்னூர் (Hotel
திருக்குறள்)
உரிமையாளர் திருமிகு வால்சந்த் ஜெயின் அவர்கள் மூன்றாம்
பதிப்பாக அன்பு கூர்ந்து வெளியிட்டுள்ளார்கள்.
இப்பெருந்தகை கோலார் ஸ்ரீமான் பீகம்சந்த்ஜீ அவர்களுக்கு திருமதி
பானிபாய் அம்மையார் அவர்களுக்கும் பிறந்தார்.
இவர் கல்வி கேள்விகளிலும் சிறந்து விளங்கினார். இவர் தாய்மொழி இந்தி
ஆயினும் தமிழ்மொழியிலும் நல்ல பயிற்சியும் அறிவும் பெற்றவர்.
தந்தையாரோடு கோலாரில் வியாபாரம் செய்து சிறந்துவிளங்கினார். இவர்
திருமதி சந்தோஷ் தேவி என்ற பெண் அணங்கை மணந்து இல்லறம் நடத்திவந்தார்.
தனியாக வியாபாரம் செய்யவேண்டி 1955இல் குன்னூரில் லேவாதேவி
வியாபாரத்தை ஆரம்பித்தார். பின்னர் திருக்குறளின் போ�ல் இவருக்குள்ள
பற்றால் குன்னூரில் 'ஹோட்டல் திருக்குறள்' என்னும் பெயரால் ஓர்
உணவுவிடுதி ஆரம்பித்து நடத்திவருகிறார். அத்துடன் நகைவியாபாரமும்
செய்துவருகின்றார். இவருக்குள்ள திருக்குறள் பயற்சியினால் குன்னூரில் நடைபெறும் விழாக்களில் கலந்துகொண்டு திருக்குறள் சம்பந்தமாகக்
சொற்பொழிவாற்றியும் வருபவர்.
திருக்குறளிலுள்ள இறை வணக்கதையும் அறத்துப் பாலிலுள்ள அறநெறியையும்
விளக்கிப்பேசி அவைகள்யாவும் ஜைனநெறிகளே என்று அறுதியிட்டு
நிலைநிறுத்திப் பேசிப் பலராலும் பாராட்டப்பெற்று விளங்கி வருகிறார்.
இப்பெருந்தகை பகுத்தறிவின்பால் பற்றுடையவராகையால் திருக்குறள்
அறிவியக்கக் கொள்கைகள் என்பதை அறிந்து இந்த நூலை அச்சிட்டு வெளியிட
விழைத்தார். அவரது விருப்பத்தை ஏற்று யானும் அனுமதியளித்தேன்.
இப்பொ�யார், ஜைன சமயத்தின் அடிப்படைக் கொள்கையாகிய அஹிம்சை,
மிகுபொருள் விரும்பாமை ஆகிய இரு பேரறங்களைத் தம் வாழ்க்கையின்
பண்புகளாகத் கொண்டு வாழ்பவர். எனவே இவர் குன்னூரிலும் நீலகிரியிலும்
நடைபெறும் தமிழ் விழாக்களுக்கும் தமிழ் வளர்ச்சி நிலையங்களுக்கும்
நன்கொடைகள் வழங்கி ஆதா�ப்பவர். இவர் சமயப்பற்றும் கொண்டவர். சமய
சம்பந்தமான எல்லா விழாக்களுக்கும் தாராளமான கொடைவழங்குபவர். குன்னூரில் தமக்குரிய ஒரு கட்டிடத்தை அருகர் ஆலயம் அமைக்க அன்பளிப்பாக
வழங்கியுள்ளார். இத்தகு சிறந்த வள்ளலாக விளங்கும் இப்பொ�யார் இந்நூலை
அச்சிட்டு வெளியிடடமைக்காக என நன்றி கலந்த வணக்கத்தைத் தொ�வித்துக்
கொள்ளுகிறேன்.
இந்நூல் முதற் பதிப்பாக வெளிவந்த போது பாராட்டுரை எழுதிய-மறைந்த
தத்துவ மேதை பேராசிரியர்அ. சக்கரவர்த்தி நைனார் M.A. (I.E.S.)
அவர்கட்கும், புதுவை, புரட்சி கவிஞர் பாரதிதாசனார் அவர்கட்கும் தமிழக
பெர்னாட்ஷா எனப் புகழ்பெற்றவராகிய அறிஞர். மு. வரதராசனார் அவர்கட்கும்
ஏனையோருக்கும் எனது நன்றிகலந்த வணக்கத்தைத் தொ�வித்துக் கொள்கிறேன்.
இந்த நூலைச் சிறப்பாக அச்சிட்டு உதவிய சிந்தாமணி அச்சக
உரிமையாளர்
திருமிகு. தி.ச. வாசுதேவன் அவர் கட்கும் என் நன்றிகலந்த வணக்கம்
உரித்தாகுக.
வாழிய நல்லறம்!
சென்னை-1 இங்கனம்
10-1-1976 T.S. ஸ்ரீபால்
பகுத்தறிவியக்கத்தின் பழைமை
இன்று எந்நாட்டிலும் பகுத்தறிவியக்கம் பரவுகிறது. அறிவுக்குச்
சுதந்தரம் வேண்டுமெனப் பல அறிவாளிகள் மதவாதிகளுடன் போராடுகின்றனர்.
எத்தகைய பேரறிஞராயினும் அவர் கூறுவனவற்றை அப்படியே
ஒப்புக்கொள்வதென்பதைத் தற்கால அறிஞர் உலகம் ஏற்றுக் கொள்ளவில்லை.
கண்கள் எவ்வாறு புறப்பொருள்களைத் தெளிவாக அறிகின்றனவோ, அவ்வாறே
நூற்பொருள்களின் உண்மைகளை நன்கு ஆராய்ந்து அறியவேண்டும் என்ற உணர்ச்சி
மக்களிடை இதுபோது பொ�தும் பரவி வருகின்றது. இவ்வுணர்ச்சி பெரும்பாலும்
புரட்சி மனப்பான்மை கொண்டவர்களிடையே தான் வளர்கின்றது.
மதவாதிகளாயினும் சா�, அரசியல் வாதிகளாயினும் சா�, பகுத்தறிவாளர்
கொள்கைகளுக்குச் செவிசாய்க்கும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.
இவ்வியக்கம், (Reationalism) மேல்நாடுகளில் வேரூன்றிவிட்டது.
கீழ்நாடுகளிலும் நன்கு வளர்ச்சிபெற்று வருகின்றது. எனவே இத்தகைய
பகுத்தறிவியக்கம் தோன்றின பழைமையையும், அது தோன்றிய நாட்டையும்,
தோற்றுவித்த அறிஞனையும் பற்றிச் சிறிது ஆராய வேண்டுவது
இன்றியமையாததாகும்.
ஆதிபகவான் யார்?
நமது தமிழ் மறையாகிய திருக்குறள் கடவுள் வாழ்த்தின் முதற் குறள் ஆதி
பகாவனைப் பற்றிக் கூறுகின்றது. மற்ற ஒன்பது குறள்களிலும் அவ்
ஆதிபகவானின் நற்பண்புகள் வருணிக்கப்பட்டுள்ளன. ஆதிபகவான் என்பதனாலேயே
அவருக்குப் பின்னர்ப் பலர் அவ்வாறே விளங்கினர் என்பது பெறப்படுகின்றது.
ஆகவே, அவர் முதல்வராகின்றார். ஜைன (சமணம்) சமய நூல்களில் ஆதிபகவானைப்
பற்றிய அரிய வரலாறுகள் நமக்குத் கிடைக்கின்றன. ஆதி பகவான் எனப்
பேசப்படுபவர் நம்மைப்போன்று தாய் தந்தையர் வயிற்றில் பிறந்தவரே. மனைவி
மக்களுடன் வாழ்ந்தவர். அரசர் குலத் தலைவர். (விறுப்புறு
பொன்னெயிற்குள் விளங்க வெண்ணெமுத்திரண்டும் பரப்பிய ஆதிமூர்த்தி -
சூடாமணி நிகண்டு) அகரமுதல வெழுத்துக்களையும், ஒன்று முதலாய எண்களையும்
தோற்றுவித்த முதல் ஆசிரியர். வாள், வரைவு, உழவு, வாணிபம், கல்வி
சிற்பம் ஆகிய அறு தொழில்களையும் கற்பித்த சமுதாய அமைப்பாளர். இல்லறம்
துறவறம் ஆகிய இரண்டு அறங்களையும் வகுத்த அறவாழி அந்தணர். அஹிம்ஸா
தருமத்தின் தந்தை. தேவைக்கு மேலான பொருளைப்பதுக்கி வைத்தல் ஐம்பெரும்
பாவங்களில் ஒன்றென அறம் வகுத்த பொதுவுடைமை வாதி. துறவறம் பூண்டு
ஐம்பொறிகளையும் வென்றவர். வினையின் நீங்கி விளங்கிய அறிவர்.
மாசிகிருஷ்ண பக்ஷ சதுர்த்தசியன்று கைலாசத்தில் நிர்வாண மெய்தியவர்.
அதாவது பேரா இயற்கை அல்லது பிறவாயாக்கைப் பொ�யோரானவர். சித்தன், சிவன்,
சிவகதி நாயகன் எனப் போற்றப்பட்டவர். அவர் நிர்வாண மெய்திய நாள்தான்
இன்றும் சிவராத்திரி யெனப் புனிதமாகக் கொண்டாடப்படுகிறது.
இவர் தமிழ் நூற்களால் ஆதிபகவன், ஆதிநாதர், ஆதிதேவர், ஆதிமூர்த்தி எனப்
புகழப்படுகின்றார். அவர்தம் இயற்பெயர் விருஷபதேவர் என்பது.
வைதிக நூற்களில் விருஷப தேவர்
விருஷபதேவர் சமண நூல்கள் பலவற்றிலும், (Indian Philosophy, Vol.
I.P.287) வைதிக சம்பந்தமான யஜுர் வேதத்திலும், பாகவதம், வராக புராணம்,
அக்கினிபுராணம் முதலிய நூல்களிலும், சிறப்பாக இடம் பெற்றுள்ளார்.
விருஷபதேவர் கொள்கை தங்கள் சமயக் கொள்கைகளுக்கு முற்றிலும்
முரண்பாடாக விருந்தும், அவர்தம் இயக்கம் அறிவிற்கும் மக்கள்
பண்பிற்கும் இன்றியமையாதனவாய் அமைந்துள்ளமையால் அவரையும் தங்கள்
கடவுளின் அவதாரங்களில் ஒருவராக
ஆரியர்கள் மேலே கூறிய பாகவதம் முதலிய
தங்கள் வைதிக நூல்களில் போற்றியுள்ளார்கள்.
பகுத்தறிவியக்கத்துக்கு அடிகோலியவர்
விருஷபதேவர் பேரறிஞர், தாம் கண்ட மெய்ப்பொருள் விளக்கத்தைப்
பலருக்கும் போதித்து வந்தார். அவர் தம் சொற்பொழிவின் முடிவில் "எனது
அறவுரைகளை அமைதியாகவும் ஆவலாகவும் கேட்டு வந்தீர்கள். நீங்கள் என்னை
ஒரு தெய்வீகப் புருஷனாகப் போற்றுகின்ற காரணத்தால் நான் கூறிய
அறிவுரைகளைனைத்தையும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமென நினையாதீர்கள்.
நிறுத்து, அறுத்து, சுட்டு, உரைத்துப் பொன் கொள்வார் போல எனது
உரைகளையும் உங்கள் பகுத்தறிவால் நன்கு ஆராய்ந்து உண்மைப் பொருளைத்
தெளியுங்கள் அதன் பின்னர் அவ்வற நெறியில் நின்று உய்யுங்கள்" என்று
மொழிவார். இந்நிலைகளை முறையே நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் என்று
அழைக்கப்படும் என, மக்களது அறிவிற்கும் பூரண சுதந்தரமளித்தும்
பேசுவார். இவ்வுண்மையை "மெய்பொருள் தேறுதல் நற்காட்சி என்றுரைப்பர்.
எப்பொருளுங் கண்டு உணர்ந்தார்" என அருங்கலச் செப்பு ஆசிரியரும்.
"மெய்ப்பொரு டொ�தல் மற்றப் பொருண்மிசை
விரிந்த ஞான
மப்பொருள் வழாத நூலி னருந்தகை யொழுக்கந் தாங்கி
யிப்பொருளிவைகள் கண்டா யிறைவனால்
விரிக்கப் பட்ட
கைப்பொருளாகக்கொண்டு கடைப்பிடி கனபொற்றாரோய்"
எனச் சூளாமணி ஆசிரியரான தோலாமொழித் தேவரும் கூறியவற்றால் தெளியலாம்.
கடையிலா அறிவினால் விளங்கிக் குற்றமற்ற அறங்களையே போதித்த விருஷபதேவர்,
தம் உரைகளையும் நன்கு ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளும்படி கூறியருளிய
அவர்தம் இணையற்ற சான்றாண்மையைக் கண்ட பேரறிவாளர்கள்,
"தீதில்லா நயமுதலாத் திருந்தியநல் வளவைகளாற்
கோதில்லா வரும்பொருளைக் குறைவின்றி யறைந்ததற்பின்
பேதில்லா வியற்காட்சி யருளியதுன் பெருமையோ"
(யாப்பெருங்கலவிருத்தி 83ஆம் சூத்திரத்தின் உரை மேற்கோள்)
எனப் போற்றித் துதித்திருக்கின்றனர்.
எனவே, எத்தகைய பேரறிஞராயினும் சா� அவர் கூறுவனவற்றை அப்படியே
ஏற்றுக்கொள்ளாமல் நமது அறிவால் நன்கு ஆராய்ந்தே அப்பொருளின் உண்மையைக்
கோடல் வேண்டுமென்ற பகுத்தறிவியக்கத்திற்கு அடிகோலியவர் விருஷப தேவரே
யாவர்.
எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு என்றும்.
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு என்றும்
திருக்குறளில் தேவரும் மொழிந்தமை காண்க.
நற்காட்சியாவரே பகுத்தறிவாளர்
பகுத்தறிவின் வழிநின்ற அறிவியக்கக் கொள்கையுடையாரைப் பொய்தீர்
காட்சியோர், துகள்தீர் காட்சியோர் மையறுகாட்சியோர், மாசறு காட்சியோர்
என அழைப்பது பண்டைக்கால மரபாகும். மேலே கூறிய காட்சிகளுக்கு நற்காட்சி
என்றே அடியார்க்கு நல்லார் பொருள் கூறியுள்ளார். இக்காலத்தில்
அத்தகையாளரைப் பகுத்தறிவாளர் {Rationalist) என்றழைக்கின்றனர்.
இந்நற்காட்சியின் நறுமணம் நம் பண்டைத் தமிழ்க் காவியங்களிலும் நீதி
நூல்களிலும் வீசுவதைக் காணலாம்.
திருக்குறளில்
"இலம் என்று வெ�குதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்"
"பொருடீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருடீர்க்கு
மாசறு காட்சி யவர்"
செயிரிற் றலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரிற் றலைப்பிரிந்த ஊன்"
"இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு"
"கொளப்பட்டே மென்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்"
என்றும், சிலப்பதிகாரத்தில் மாதவி தன் காதலானகிய கோவலனுக்கு எழுதிய
ஓலையில்.
"கையறு நெஞ்சிம் கடிம் வேண்டும்
மொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி"
என்றும் குறிக்கப்பட்டுள்ளன. மேலும் மாடலன் செங்குட்டுவனைச்
சந்தித்தது பல அறவுரைகள் பகர்கின்றான். முடிவில் இவைகள் யாவும்,