 |
அறநூல்கள் உதயம்
பகவான் மகாவீரர் வீடுபேறு பெற்ற பின்னர் அப்பெருமகன் நிலைநிறுத்திய
அறநெறிகளையும் தத்துவக்கலைகளையும் இடைவற்றாது பரப்பும் பணியை பாரத
நாட்டின் பல்வேறு பாகங்களிலும் உள்ள கலைசான்ற அறவோர்கள்,
முனிபுங்கவர்கள், துறவிகள், அறிஞர்கள், புலவர்கள், கவிஞர்கள் ஆகிய
பலரும் அவரவர்கள் வாழும் பகுதி மொழிகளில் தீவிரமாகப் பிரச்சாரம்
செய்து வந்தனர். இவ்வாறு சில காலம் சென்ற பின் அறநெறி பிரசாரத்தோடு
ஆங்காங்குள்ள மொழிகளில் அறநூல்களை இயற்றி எங்கும் பரப்பினர்.
இப்பெருநிலை தமிழகத்திலும் விளங்கிற்று. அறநூல்களை இயற்றியருளிய
தமிழகத்துச் சான்றோர்களில் சிலரை மட்டும் அறிந்து மேலே செல்வோம்.
முதல் அகத்தியர், தொல்காப்பியர், குந்தகுந்தாச்சாரியார் (திருவுள்ள
தேவர்), சமந்தபத்ர ஆச்சாரியர், அகளங்க தேவர், வீரநந்தி, வாமன முனிவர்,
இளங்கோஅடிகள், திருத்தக்க தேவர், தோலாமொழித்தேவர், கொங்குவேளிர்
ஜினசேனாச்சாரியர், குணபத்ர ஆச்சாரியார் போன்ற பல அறவோராவர். இத்தூய
அறவோர்கள் பலரும் வடமொழி, தமிழ்மொழிகளில் இணையற்றப் புலமை
வாய்ந்தவர்கள். பிராக்ருதம், பாலி முதலிய பல மொழிகளிலும் வல்லுநர்.
மேற்கண்ட ஜைன அறவோர்கள் அறநூல்கள் மட்டுமின்றி தொன்மைவாய்ந்த நம்
தீந்தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், சிறப்பிற்கும், பெருமைக்கும்
உரிய இலக்கிய இலக்கண நீதி நூல்கள், நிகண்டுகள், கணித நூல்கள், இசை
நூல்கள், சோதிட நூல்கள் போன்ற பல அரும்பெரும் நூல்களைப் படைத்துள்ள
சேவைகளை தமிழகம் நன்கு அறியும். பன்மொழிப் புலவராகிய இத்தவத்தோர்களில்
தலைசிறந்து விளங்கிய தமிழ் முனிவர் குந்தகுந்தாச்சாரியர் ஆவர்.
இச்சான்றோரின் காலம் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது.
இம்மாமுனிவர் பிராக்கிருத மொழியில் சமயசாரம் போன்ற பல இணையற்ற தத்துவ
நூல்களைப் படைத்தவர். இத்தத்துவ சூடாமணி தமிழகத்தில் அறநெறிகளுக்கு
மாறான சமயநெறிகள்
புரியும் குழப்பங்களைக் கண்டார். தமிழ்மொழியில்
அறநெறிகளின் மேம்பாட்டினை விளக்கும் ஒரு நூல் இயற்றவேண்டுமென
எண்ணங்கொண்டார். பகவான் விருஷபதேவர் அருளிய அறநெறிகளைத் திரட்டி
முழுமையாகத் தமிழ் மறை எனும் பெயரால் இரண்டு அடிகளைக் கொண்ட குறள்
வெண்பாவடிவில் நூல் இயற்றினார். இச்சீரிய சிறந்தத் தமிழ் மறையைக்
கற்றறிந்த அறிஞர்கள் குந்தகுந்தாச்சாரியாரை திருவுள்ளத்தேவர் என
அழைத்துப் போற்றினர். இப்பெருமகனார் பாடலிபுத்திரத்தில் (திருப்பாதிரிப்புலியூர்)
முதன் முதல் திராவிடச் சங்கத்தை நிறுவினார். அன்று முதல் தமிழ்மறை
எங்கும் பரவலாயிற்று. தமிழ் மொழியில் தலைசிறந்த நூலாகவும்,
அறநெறிகளின் முதல் நூலாகவும் போற்றி வந்தனர். இப்புனித தமிழ் மறை
எனும் பெயரை மாற்றி திருக்குறள் எனும் திருவுள்ளத்தேவரை திருவள்ளுவர்
என்றும் பிற்காலத்தில்
திரித்து இவ்விழி செயலை மாமூலனார் எனும் நோ�ய
புலவர் பெருந்தகை.
"அறம் பொருள் இன்பம் வீடெனும் நான்கின்
திறம் அறிந்து செப்பிய தேவை - மறந்தேயும்
வள்ளுவன் என்பானோர் பேதை அவன் வாய்ச்சொல்
கேளார் அறிவுடையார்"
எனக் கண்டித்துள்ளார்.
தமிழ் மறை எனும் பெயர் வரலாற்றுச் சிறப்புடையது. சுமார் 600
ஆண்டுகட்கு முற்பட்ட சமயம். திவாகர வாமன முனிவர் நீலகேசி என்ற தர்க்க
நூலுக்கு எழுதிய உரையில் தமிழ் மறையை மேற்கோள் காட்டும் பகுதியில் "இ�து
எம்மோத்தாதலால்" (எமது வேதம்) என உரிமை கொண்டாடிப் போற்றுவதினின்றும்
ஆதியில் திருக்குறளுக்கு தமிழ் மறை எனும் பெயரே வழங்கி வந்துள்ளது
என்பது உறுதிப்படுகின்றது. இப்பேரறங்கள் யாவும் உலகுக்கே
உரியவை என
முன்னரே அறிந்துள்ளோம். இப்பேருண்மையைத் திருக்குறளை ஆழ்ந்து
கற்றறிந்த இன்றைய உலக மேதைகளும் அறத்திற்கு மாறான சமயவாதிகளும்
திருக்குறள் உயா�ய அறம் சாற்றும் ஒப்பற்ற பொது நூல் எனப் பாராட்டிப்
புகழும் பெற்றியைக் கண்கூடாகக் காண்கிறோம்.
அறநெறிகளின் உயர் சிறப்பை அறிந்து ஏற்றுக்கொள்வது வேறு. அறிந்து
தங்கள் தங்கள் வாழ்க்கையில் கொணர்வது வேறு. வாழ்க்கையில்
இணைத்துக்கொள்வது அவரவர் அறிவாற்றலையும் பண்பாட்டையும் பொருத்தது.
ஏற்றுக்கொள்வது பகுத்தறிவின் பாற்பட்டது. இணைத்துக்கொள்வது
நற்காட்சியின் மாட்சியாகும். எவ்வாறாயினும் அறம் அமைதி காக்கும்படை
என்பதை உலகம் ஒருமுகமாக ஒப்புக்கொண்டுள்ளது. அறம் மக்கள் பண்பாட்டை
உயர்த்தும் மறநெறி வீழ்த்தும் என்ற உண்மையையும் அறிந்துள்ளது. இத்தகு
பெருமை வாய்ந்த அறநெறிகளை பகவான் விருஷபதேவர், எக்காலத்தும் வாழும்
அறங்கள் என என்றோ, என்றோ, என்றோ திருவாய் மலர்ந்தருளியது இன்று
உண்மையாகி மிளிர்கிறது. பகவான் விருஷபதேவர் அருளிய அறம்
திருவுள்ளத்தேவரால் உலகெங்கும் கதிரவன் போன்று ஒளிவிட்டு வீசுகிறது.
நற்காட்சி ஒளிவிளக்கு
பகவான் விருஷபதேவர் தாம் படைத்தருளிய அறநெறிகளை மக்களிடையே முதன்
முதல் விளக்கி உரையாற்றுகையில் 'நீங்கள் இந்நல்லறங்களை முழு
நம்பிக்கையுடன் ஏற்றுக்கடைப்பிடிக்க வேண்டுமெனக் கட்டளைப்
பிறப்பிக்காது அவரவர் அறிவினால் ஆழ்ந்து சிந்தித்து
ஏற்றுக்கொள்ளுங்கள் என்று பணித்தருளிய பேருரையின் வரலாற்றை முன்னரே
அறிந்துள்ளோம். அறிவுக்கு சுதந்திரமளித்தருளிய பகவானின் பெருமையை
மக்கள் போற்றிய புகழுரைகளையும் படித்தறிந்துள்ளோம். அப்பொன்னுரைகளை
இக்கால மக்கள் அறிந்து பகவானைப் போற்றித் துதிக்க வேண்டி சுமார்
ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் விளங்கிய அறவோர் குணசாகரர் படைத்தருளிய
துதிப்பாடல்களை நாம் பாடிப்பாடி இன்புறுவோம்.
"தீதில்லா நயமுதலாத்திருந்திய நல்லளவைகளாற்
கோதில்லா வரும் பொருளைக் குறைவின்றியறைந்த தற்பின்
பேதில்லா வியற்காட்சி யருளியதுன் பெருமையோ"
இத்துதிப் பாடலில் நற்காட்சியை இயற்காட்சி எனப் புகழ்ந்து
போற்றியுள்ளார்.
குறிப்பு : (யாப்பருங்கல விருத்தி 83 வது சூத்திரத்தின் உரைமேற்கோள்)
சிந்தனையைக் கிளறும் இச்சீரிய நற்காட்சி ஒளிவிளக்கை உலகம் போற்றும்
உயா�ய அறவோர் திருவுள்ள தேவர் தாம் படைத்துள்ள திருக்குறளில்
எவ்வாறெல்லாம் ஒளிபரப்பிக் காட்டியுள்ளார் என்பதைக் கண்டுகளிப்போம்.
கற்றோர் கடமை
உலகில் பல்வேறு சமயங்களும் அவைகளின் கொள்கைவிளக்க நூல்களும்
நிறைந்துள்ளன. அவ்வாறே அறம் சாற்றும் அறநெறி நூல்களும் காட்சி
அளிக்கின்றன. கற்றறிந்த சான்றோர்கள் இவ்விருசார் நூல்களையும் நன்கு
பயிலவேண்டும். பயின்றபின் இவைகளில் மக்கள் அறிவுக்கும், வாழ்க்கைப்
பண்பிற்கும், ஒருமைபாட்டிற்கும், பொருந்தும் நூல்கள் யாவை? பொருந்தா
நூல்கள் எவை எவை என்பதைப் பகுத்துணர்ந்து பொருந்தும் நூல்களையே கற்க
வேண்டிய நூல்களாகத் தேர்ந்தெடுத்துக் கற்க வேண்டும். அவைகளைக்
கற்றபின் அந்நூல்களின் கொள்கைகளில் பற்று கொண்டு அவ்வழிகளில் நின்று
ஒழுகவேண்டும். இ�து கற்றறிந்த மக்களின் கடமையாகும்.
இக்கடமையுணர்ச்சியைத் தேவர்,
"கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக"
என அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். இக்குறட்பாவிலே நற்காட்சி,
நன்ஞானம், நல்லொழுக்கம் ஆகிய மும்மணிகளும் அடங்கியுள்ளன.
இக்குறட்பாவில் அடங்கியுள்ள தத்துவக்கொள்கை அறிவுக்கு விருந்தாகும்.
பகவான் மகாவீரர் அருளிய அறவுரையில் சாதியோ, சமயமோ, நம் உடலோடும்,
உயிரோடும் பிறந்தவையன்று. அவை அவரவர் பெற்றோரின் வழி சேர்ந்தவை. நம்
ஆடை அணிகலன்கள் போன்று வேறுபட்டவை எனத் திருவாய் மலர்ந்தருளிய
தெய்வீக மொழி, இக்குறள் அமுதத்தில் பொழிகின்றது. இப்பேருரையின்
அடிப்படையிலேயே தேவர் பெருந்தகை.
"பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை
யான்" என்றும் திருக்குறள் வாயிலாக மக்களை விழிக்கச் செய்துள்ளார்.
இவ்வாறெல்லாம் நற்காட்சியின் மாட்சியைத் திருக்குறள் முழுமையும்
ஆங்காங்கு காணலாம்.
குறிப்பாக மெய்யுணர்தல், அறிவுடைமை என்ற இரு அதிகாரங்களே
சான்றுகளாகும்.
"எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு"
"எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு"
என்னும் குறட்பாக்கள் பகவான் விருஷபதேவர் அருளிய அறிவின் உரிமை எதிரொலிக்கின்றன. இவ்வாறே நற்காட்சியின் மாட்சியை மாசறு காட்சி,
புன்மையில் காட்சி, துளக்கற்ற காட்சி, கடனறி காட்சி, நடுக்கற்ற காட்சி
என ஆங்காங்கு ஆண்டுள்ளார். திருக்குறள் மரபிலேயே, மற்ற ஜைன
இலக்கியங்களான சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, சூளாமணி, பெருங்கதை,
வளையாபதி, நீலகேசி, மேருமந்திரபுராணம், யசோதர காவியம் போன்ற பல
இலக்கியங்களிலும், நாலடியார் அறநெறிச்சாரம் போன்ற பல நீதி நூல்களிலும்
பொய்தீர் காட்சி, மையறு காட்சி, துகள்தீர் காட்சி, மயல்தீர்ந்த காட்சி,
தேர்ந்துணர் காட்சி எனப் பலப் பெயர்களால் நற்காட்சி மணம் கமழ்வதை
அறியலாம். அறநூல்களிலன்றி சமயங்கள் சார்பான நூல்களில் நற்காட்சி
இடம்பெறாது. சமய நூல்கள் கடவுளின் பக்தியையும், அந்நூல்களில்
கூறியுள்ள எல்லாக் கூற்றுக்களையும் நம்ப வேண்டும் என நம்பிக்கையை
வற்புறுத்துபவை. ஏதுக்களாலும், எடுத்த மொழியாலும் சோதிக்கலாகா எனும்
கொள்கையுடையவை.
அறநெறியார் கொள்கையை முன்னரே அறிந்துள்ளோம். எப்பொருளையும் "ஆராய்ந்து
அறி", "தெளிந்து நட" எனும் அறிவுத்துறையின் திறவுகோலாகிய நற்காட்சியை
கொண்டதெனும் உண்மையை பண்டைய காலமுதல் பலரும் அறிந்ததே. இவ்வறிவியல்
தத்துவம் தகுபெருமையுடைய நற்காட்சியெனும் பகுத்தறிவு இயக்கம் இன்றைய
உலகுக்கு இன்றியமையாதது.
இன்றைய உலகப் போக்கை உற்றுக் காணின் எங்கும் அமைதியின்மை,
பகைமையுணர்ச்சி, ஒற்றுமையின்மை, அறியாமை, ஒழுக்கக்கேடு, சாதி சமய
பூசல்கள், மூட நம்பிக்கைகள், பொருள் குவிக்கும் பேராசை, நாடு
பிடிக்கும் நாட்டம் போன்ற பல்வேறு தீய செயல்கள் குடிகொண்டுள்ளன.
இக்கேடுகள் மறைந்து உலகெங்கும் அமைதி நிலை, அன்பும் அறனும், அறிவும்,
பண்பும் வளர வேண்டும். இப்பெருநிலை பரவ வேண்டுமாயின் அஹிம்சா அறமொன்றே
துணை செய்யும். இவ்வுண்மையை நன்கு அறிந்தே மகாத்மா காந்தியடிகள்
பகவான் விருஷபதேவர் அருளிய அஹிம்சையை அரசியலிலே புகுத்தி வெற்றியும்
கண்டார். உலகமும் அஹிம்சையின் ஆற்றலைக் கண்டு வியப்புற்றது.
அதனாற்றான் இன்றைய வல்லரசு நாடுகளும், மற்ற சிறுசிறு நாடுகளும்
சமத்துவம், சமாதானம், நட்புறவு எனும் அறநெறி மந்திரங்களை ஓதிக்கொண்டு,
மக்கள் உயிர்களை மதித்து, ஆயுதக் குறைப்பு அணுகுண்டு அழித்தல், போர்
நிறுத்தம் போன்ற உணர்வைப் பெற்று எல்லா நாடுகளிலும் பேசியும்,
செயல்படவும் துடிக்கின்றனர். இச்சூழ்நிலையை அஹிம்சையின் வெற்றி எனின்
எவரும் ஏற்பர். இது ஒரு பொற்காலம் எனலாம். இவ்வா�ய வாய்ப்பை பாரத
நாட்டிலுள்ள ஜைன அறிஞர்கள் பண்டைய அறநெறிகளை உலகெங்கும் பரப்பும்
பணிகளில் ஈடுபடவேண்டும். ஜைன அறநெறிக்கொள்கைகளே உலகுக்கு நலம்
பயக்கும் "ஒளி விளக்குகள்."