 |
மறுநாள் மகாவீரர் புறப்பட
ஆய்த்தமானார். இதனை அறிந்த மிருகவாதி தனது கற்பைக் காப்பாற்றிக்
கொள்ளத் துறவுநிலை தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்து ஒரே மகன்
உதயணனிடத்தும் உறவினர்களிடத்தும் தான் மகாவீரர் திருவடிகளில் தீ�க்ஷப்
பெற்றுக் கொள்ளப்போகிறேனென்று கூறி அவர்கள் எல்லோரும் கண்ணீர்விட்டுக்
கலங்கும்படி மிருகாவதி மகாவீரர் திருவடிகளில் வீழ்ந்து தனக்குத்
துறவற நெறியை அளிக்க வேண்டுமெனக்
கோரினாள். அதனைக்கண்ட
சந்தப்பிரச்சோதனன் மனைவி சிவதேவியும் மகாவீரர் அடிபணிந்து தனக்கும்
அந்நிலையை அருளுகவென்றாள். மகாவீரர் மறுக்கவியலாமல் இருவருக்கும்
தீ�க்ஷயளித்துச் சென்றுவிட்டார். இந்நிகழ்ச்சி கி.மு. 543ல் நடந்தது.
மகாவீரரின் போர் நிறுத்த வெற்றிச் செய்தியைக் கேட்டு மக்கள் அப்பெரு
மகனை வணங்கி வாழ்த்தினர்.
"உற்ற நோய் நோன்றால் உயிர்கட்கு உறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு"
என்னும் உயா�ய தவநெறியில் நின்றார். ஆதியில் ஆதிபகாவனால் அருளப்பெற்ற
அகிம்சையின் தத்துவத்தை உலகெங்கும் பரப்ப முனைந்தார்.
"மற்றுந் தொடர்பா டெவன் கொல்
பிறப்பறுக்க லுற்றார்க்கு உடம்பும்மிகை"
என்ற தவநிலையில் உறுதியாக நின்று தமது ஆத்மசக்தியை வளர்த்து வந்தார்.
மக்கள் வாழ்க்கையின் பகைவர்களான காமம், குரோதம், மோகம், லோபம்
ஆகியவற்றைக் கடுமையாக எதிர்த்து அவைகளை அடக்கி ஆண்டார். தமது
அறிவாற்றலாலும் தவத்தின் வலிமையாலும், பற்றற்ற பண்பிதனாலும்
ஐம்பொறிகளையும் தம் வயப்படுத்தினார். அவதிக் ஞானம் என்னும் பேரறிவு
ஒளிவிட்டு வீசிற்று. நமது வாழ்க்கைப் பண்பிற்கும் ஆன்மீக
முன்னேற்றத்திற்கும் அவரவர்களின் அறிவாற்றலும் ஐம்பொறி அடக்கமுமேயன்றி
வேறெந்த சக்தியும் துணைபுரியாது என்ற தத்துவத்தைத் தமது தூய தவத்தின்
வாயிலாக உலகுக்கு மெய்பித்துக் காண்பித்தார். இப்பிறவிக்குக்
காரணமாயுள்ள இவ்வினைகளையும் வென்று பிறவிப் பெருங்கடலைக் கடக்க
முயற்சிப்பதே மக்கள் பிறவியின் கடமை என்ற உண்மையை விளக்கும்
பேரொளியாகக் காட்சியளித்தார்.
அப்பெருமகன் தவநிலை நாளுக்கு நாள் வளர்ச்சியுற்று வினையின்
பெரும்பகைவரானார். அவர் ஆன்மா உன்னத நிலையை அடைந்தது. கேவலக்ஞானம்
என்னும் முழுதுணர் ஞானத்தைப் பெற்றார். வினைவரும் வாயில்கள்
அடைப்பட்டன.
இணையற்ற இப்பெருநிலையை அறிந்த இந்திரன் சமவசரணம் என்னும் அறவுரை
மண்டபம் அமைத்தான். இச்சமவ சரணத்தில் பகவான் மகாவீரர் வீற்று உலகுக்கு
அறவுரைப் பகன்றானர். இப்பேரறங்களைக் கேட்க மக்களும், தேவர்களும்,
இந்திரர்களும், மன்னர்களும், விலங்கினங்களும்கூட விரும்பிக்
குழுமியிருந்தனர்.
அறவுரைகள்:
அஹிம்ஸையின் அடிப்படையில் மகாவீரர் பல அறநெறிகளை அருளினார்.
அக்கொள்கைகளை மக்கள் கருத்திலும், வாழ்க்கையிலும் வழிபாட்டிலும்
ஊடுருவச் செய்தார். எல்லா மக்களையும் உடன் பிறந்தோராக நேசி; என்பன
அவர் வீர உரைகளுள் முதன்மையானவை. மக்கள் பலரும் அமைதியும் இன்பமும்
பெற்று வாழ அஹிம்ஸா அல்லது கொல்லாமையுடன் மிகு பொருள் விரும்பாமை,
பகுத்துண்டு வாழ்தல் பொய்பேசாமை, பிறர்மனை நயவாமை, இரவில் உணவு
உட்கொள்ளுவதைப் புகழாமை, சான்றோரை இகழாமை போன்ற நல்லறங்களை நாடெங்கும்
பரப்பினார். சாதி சமய வேறுபாடுகளை வன்மையாகக் கண்டித்து வந்தார்.
வேள்விக் கொலை, உயிர்பலி ஆகிய மூட நம்பிக்கைகளைக் கைவிடுமாறு
போதித்தார். இவைகளால் சமயவாதிகளாலும், சுய நலக்காரர்களாலும் பல
தொல்லைகளுக்கு உள்ளானார். எத்தகைய இடையூறுகளையும் தூற்றலையும்,
தொல்லைகளையும் பொருட்படுத்தாமல் மக்கள் பலருக்கும் தமது
சீர்திருத்தக்கொள்கைகளை அமைதியாகவும், பொறுமையாகவும் பின்வருமாறு
போதித்து வந்தார்.
அறிவுடை மக்களே!
சாதி சமய வேறுபாடுகளால் மக்கள் வாழ்க்கை சிதறுண்டு ஒற்றுமைக் குலையும்,
பகைமையும், மோதலும் வளரும். ஆதி காலத்து அறவோர்கள் மக்கள் வாழ்க்கைப்
பண்பை வளர்க்க அறம் என்ற பெயரால் பல்வேறு ஒழுக்க நெறிகளை
வகுத்தருளினர். பின்னர் சமயம் என்ற பெயரால் பல கொள்கைகள் நாட்டில்
பரவ ஆரம்பித்தன. சமயம் என்பதற்கு அறம் என்றே பொருள் கொள்கின்றேன்.
சமயம் எனில் ஒரு மெய்ம்மை எனில் தவறில்லை. சமயத்தின் பெயரால்
புறச்சடங்குகளை
புரிவது அறிவுடைமையாகாது. அச்சடங்குகளால் மக்கள்
வாழ்க்கை நலமும் ஆன்ம லாபமும் கெடும். சடங்குகளின் வாயிலாக ஆன்மா
விடுதலையடையாது. வேள்விக் கொலையும் உயிர்ப்பலியும்
புரிவது
அறநெறிக்கும் அன்பு நெறிக்கும் முரணானது. ஒழுக்கமே மக்கள் வாழ்க்கையை
உயர்த்தும் என்னும் உண்மையை அறிவு உலகம் ஒப்புக் கொண்டுள்ளது.
இவ்வுண்மையை அறியாமல், யான் கூறும் அறநெறிகளையும் மக்கள்
ஓருமைப்பாட்டின் தத்துவத்தையும் கண்டு சினம் கொள்ளுகின்றீர்கள். நாம்
அமைதியாகவும் இன்பமாகவும் வாழவேண்டுமாயின் வாழ்க்கையின் இயல்பையறிதல்
வேண்டும். வாழ்க்கை வேற்றுமைக் கொண்டதல்ல! ஒற்றுமையின் உன்னதச்
சின்னமாகும். இன்றைய உலகை நோக்கும்போது எங்கும் வேற்றுமையே
காணப்படுகின்றது. நாட்டு வேற்றுமை. இனவேற்றுமை, நிறவேற்றுமை, மொழி
வேற்றுமை, சாதிவேற்றுமை, சமய வேற்றுமை, ஆகிய பல துறைகளிலும்
வேற்றுமைகளே வளர்ந்து வருகின்றன. இவ்வேறுபாடுகளால் நாம் காண்பது என்ன?
எங்கும் கலகம், எங்கும் போர், எங்கும் குழப்பம், எங்கும் மோதல்,
எங்கும் கொலைகள், எங்கும் கவலை, எங்கும் நடுக்கம், இந்தக் கோரக்
காட்சிகளா மக்கள் வாழ்க்கை இவைகளா நமது வாழ்க்கையின் இலட்சியங்கள்?
இவைகள் தானா நம்மை வாழ்விக்கும் வாழ்க்கையின் இயல்பு? எண்ணிப்
பாருங்கள்.
வாழ்க்கையென்பது நாம் உலகில் காண்பது போன்றதன்று. வாழ்க்கை உட்புறத்
தத்துவம் கொண்டது. அது முதுமை அற்றது. அழிவே இல்லாதது. அன்பின் வழியது!
வேற்றுமையின் விரோதி! வேற்றுமையில் பகைமை குடிகொண்டிருக்கிறது, மோதல்
மறைந்திருக்கிறது. தொல்லைகளும், துக்கமும், வஞ்சகமும், வேற்றுமையில்
கலந்திருக்கின்றன. வாழ்க்கையின் இயல்பு அத்தகையதல்ல! வாழ்க்கை
இன்பத்தை நாடுவது பகைமையை வெறுப்பது கொலையைக் கண்டு அஞ்சுவது!
தீமையைக் கடிவது! பிறர் துன்பங் கண்டு வருந்துவது! பிறர் இன்பங் கண்டு
மகிழ்வது. இத்தகு இயல்புகளைக்கொண்ட வாழ்க்கைக்கு வேற்றுமை உணர்ச்சி
எவ்வாறு ஏற்றதாகும். ஆகவே வாழ்க்கை வேற்றுமையின் தொடர்புடையதல்ல
வென்பதை உய்த்துணரல் வேண்டும்.
நாம் முன்னர் கூறியது போன்று வாழ்க்கைச் சமாதானத்தையும்
சமத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டது. அதனாற்றான் மக்கள் பலரும்
ஆங்காங்கு கூட்டம் கூட்டமாகக் சேர்ந்து வாழ்கிறோம். சங்கங்கள்
அமைத்தும், விருந்துகள் நடத்தியும் நட்புறவை வளர்க்கின்றோம்.
வாழ்க்கையானது அன்பு, ஒத்துழைப்பு, இரக்கம், சேவை, சகிப்புத்தன்மை
ஆகிய குணங்களுக்கிடையில் வளர்ந்தும் வளர்த்தும் வருகிறது. முன்னேறிக்
கொண்டும், முன்னேற்றிக் கொண்டும், வாழ்ந்து கொண்டும். வாழவைத்துக்
கொண்டும் வருகிறது. எனவே வாழ்க்கை ஒரு தெய்வீகத் தன்மை வாய்ந்ததென்பதை
அறிகிறோம். நமது வாழ்வும், தாழ்வும், நமது இன்பமும் துன்பமும், நமது
வாழ்க்கையைச் செலுத்தும் பாதையிலேயே அமைந்திருக்கின்றது என்ற உண்மையை
அறிந்து அனைவரும் அஹிம்ஸையின் அறநெறியில் வாழ்க்கையைச் செலுத்துங்கள்.
இல்வாழ்க்கைப் பண்பிற்கு நற்சாட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் ஆகிய
மும்மணிகளைக் கடைப் பிடியுங்கள் என உருக்கமாக விளக்கிப் பேசிவந்தார்.
மகாவீரரின் இப்பேருரைகளைக் கேட்டு மக்கள் பலரும் மனமாற்றம் அடைந்தனர்.
அப்பெருமகன் வாழ்க்கையிலும் அறவுரைகளிலும் அவரது அருள் தன்மை
விளங்கிற்று எனவே மக்கள் அனைவரும் அவருடைய அருள் நெறிக் கொள்கைகளை
மேற்கொண்டனர். அரசர்களும் அடிப்பணிந்தனர். தங்கள் கொள்கைகளுக்கு
மாறுபாடாக விருப்பினும் பொதுமக்களினல் பலர் மகாவீரர் கொள்கைகளை
ஏற்றுக் கொண்டனர். குறிப்பாக வைதீக சமயத்தைச் சார்ந்த இந்திரபூதி
கெளதமர் என்ற அந்தணர், மகாவீரர் கேவல ஞானம் பெற்றுயர்ந்துள்ளதையும்,
அப்பெருமகனின் அறவுரைகளின் மேன்மையையும், கேள்வியுற்றுத் தமது
நூற்றுக்கணக்கான சீடர்களுடன் மகாவீரர் அறங்கூறும் மண்டபமாகிய சமவ
சரணத்திற்குச் சென்றார்.
இந்திரபூதி அங்குச் சென்றதன் நோக்கம் மகாவீரருடன் சொற்போர்
புரிந்து
வைதீகச் சமயக் கொள்கையை நிலைநாட்டவேயாகும். ஆனால் சமவ சரணத்தைக்
கண்டதும் இந்திரபூதியின் உள்ளம் தளர்வு அடைந்தது. உள்ளே நுழைவாயிலில்
அமைந்திருக்கும் மானத்தம்பத்தை உற்று நோக்கினார். அவ்வளவு தான்!
இந்திரபூதியின் அழுக்காறும் அகங்காரமும் அகன்று மனத்தூய்மையடைந்தார்.
மகாவீரா�ன் அறவுறைகளைக் கேட்டுத் தமது வைதீகச் சமயக் கொள்கையை
விட்டுத் தாமும், தமது சீடர்களும் மகாவீரரின் அருளறத்தை மேற்கொண்டனர்.
மகாவீரா�ன் அறிவுரைகளை மக்களுக்கு விளக்கிக் கூறும் கணதரர் பதவியையும்
இந்திரபூதிக்கு அளித்து சிறப்பித்தார்.
மகாவீரரின் உபதேசத்தால் நாடெங்கும் மறுமலர்ச்சி உண்டாகிவிட்டது.
மக்கள் புத்துயிர் பெற்றனர். தெய்வத்தின் பெயராலும் யாகத்தின்
பெயராலும், நடைபெற்றுவந்த மூட நம்பிக்கைகள் மறைந்தன. உயிர்கொலையும்,
ஊணுண்ணலும் ஒழிந்தன. மக்களுக்குள் உயர்வு தாழ்வுகள் தலை காட்டவில்லை
பகுத்துண்டு பல்லுயிரோம்பும் பண்புகள் பாரெங்கும் வளர்ந்தன. மக்கள்
உள்ளங்களில் அன்பும், அறமும் பண்பும் மலர்ந்தன.
இவ்வாறு பகவான் மகாவீரர் எழுபத்திரண்டு வயதுவரை மக்கள் வாழ்க்கை
நலத்திற்காகவுய், பண்பாட்டிற்காகவும் இடைவிடாது பணியாற்றி, கடையிலா
ஞானம், கடையிலாக் காட்சி, கடையிலா
வீரியம், கடையிலா இன்பம் நாமமின்மை,
கோத்திரமின்மை ஆயுள் இன்மை, அந்த ராயங்களின்மை என்னும்
எண்குணங்களாலுயர்ந்தார். இறுதியாகப் பாவாபுரி நகா�ல் கி.மு. 527-ல்
கார்த்திகைத் திங்கள் கிருஷ்ண பக்ஷத்து சதுர்த்தசி இரவு கடைசி
ஜாமத்தில் பா�நிர்வாணமென்னும் வீடுபேற்றை அடைந்தார்.
"ஐந்தவித்தான் ஆற்றல் அகல் விசும்புனார் கோமான்
இந்திரனே சாலும்கா�"
என்னும் தமிழ்மறையை மெய்ப்பிக்கும் வகையிலும் இந்திரன் முதலிய பல்வேறு
தேவர்களும், சக்கரவர்த்திகளும், மன்னர்களும், மக்கள் வெள்ளமும்
மகாவீரரின் பா�நிர்வாணக் காட்சியைக் கண்டுகளித்து அப்புனித நாளை
தீபாவளி எனப்போற்றிக் கொண்டாடினர். இவ்வரலாற்றின் அடிப்படையிலேயே
இன்றும் நாம் தீபாவளியென அப்புனித நாளைக் கொண்டாடி வருகிறோம்.
பகவான் மகாவீரர் அருளிய அறவுரைகளில் சில :
1. உயிருள்ள எல்லா ஜீவன்களும் துன்பத்தை விரும்பவில்லை. ஆகவே உன்
உயிரைப்போல்பிற உயிர்களையும் நினைத்து அவைகளைக் கொலை செய்யாதே!
துன்புறுத்தாதே. எவ்வுயிரிடத்தும் அன்பாயிரு அன்பே உயிரின் இயல்பு.
எல்லோரிடத்திலும் அன்புடன் பழகு. நீயும் வாழ். பிறரையும் வாழ விடு.
இதுதான் அஹிம்சையின் தத்துவம்.
2. நல்வர்களுடன் பழகு. இன்சொல் பேசு. தீமைப்புரி வோரைத் திருத்த
முயற்சி செய். பகைப்
போரிடத்தில் பகை கொள்ளாது. பரந்த மனப்பான்மையுடன்
நடந்து கொள். பகைமை உணர்ச்சி பறந்து போம்.
3. மனிதப்பிறவி பா�பூரண அறிவுடையது. அறிவின் துணைக்கொண்டு நன்மை
தீமைகளைப் பகுத்துணர்ந்து, நன்மையையே கடைப்பிடி, தீமையை அகற்று.
4. வாழ்வு, தாழ்வு, இன்பம், துன்பம் ஆகியவற்றிற்கு அவரவர்களின் செயலே
காரணமாகும். இவைகளுக்கு வேறெந்த சக்தியும் காரணமல்ல. ஆகவே மனம்,
வாக்கு, செயல் ஆகியவற்றைச் செம்மைப் படுத்திக்கொள்.
5. ஒவ்வொரு ஆன்மாவும் அதனதன் ஊழ்வினைக்கேற்ப மனிதராகவும், தேவராகவும்,
விலங்குகளாகவும், மரம், செடி, கொடிகளாகவும், நரகராகவும் பிறவி
எடுக்கின்றன. இவ்வூழ்வினையை வெல்லும் ஆற்றல் மனிதப்பிறவிக்கு உண்டு.
எனவே வினைகளை வென்று வீடு பேறு பெறுவதையே குறிக்கோளாக கொண்டு
அறநெறிகளைக் கடைப்பிடி.
6. நற்சாட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் ஆகிய மும்மணிகளே வினைகளை வென்று
வீடுபேறு பெறும் வழி.
7. தேவமூடம், உலகமூடம், பாசண்டிமூடம் ஆகிய மும் மூடங்கள் அறிவைக்
கெடுத்து அல்லலை விளைவிக்கும். எனவே இம்மும்மூடப்புலிகளை வென்றவர்களே
முழு அறிவைப் பெற்றவர்கள். இப்பேரறிவை நம்மை அறநெறியில் செலுத்தும்.
8. அஹிம்ஸையை மேற்கொண்ட ஒவ்வொருவரும் பிறர் துன்பங்கொண்டு இரங்கும்
இயல்புடையவரகள். இந்நிலையை உறுதியாக உடையவர்கள் தாங்கள் ஈட்டும்
பொருளை வரையறுத்துக் கொள்ள வேண்டும். தேவைக்கு மேலாக ஈட்டிய பொருளை
சமுதாய நலத்திற்கும், பொருளற்றோருக்கும் பகுத்துண்டு வாழும் பண்பை
மேற்கொள்ள வேண்டும்.
9. மக்கள் பிறவி மாண்புடையது. பிறப்பினால் எல்லா மக்களும் ஒன்றே.
அவரவர்கள் தொழில் வேற்றுமையைக் கொண்டு மக்களுக்குள் உயர்வு தாழ்வு
கற்பிப்பது பெருங்குற்றம். சாதி சமயங்கள் மக்களைப்
பிரித்து
ஒற்றுமையைக் குலைப்பதால் அவைகளைச் சிந்தையாலும் நினையாது எல்லா
மக்களையும் உடன் பிறந்தாராக உறவு கொண்டாடு.
10. இவ்வுலகம் என்றும் அழியாதது, உலகில் வாழும் உயிர்கள் பிறந்திறந்து
உழலும், எனவே யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை என்ற
உண்மையை உணர்ந்து பிறவாநிலையை அடைய உயா�ய ஒழுக்க நெறிகளை மேற்கொண்டு
வாழ்க.