 |
ராயபாக் ஜெயின் மடம்:
ராயபாக் கோலாப்பூருக்கும் பெல்காமுக்கும் இடையேயுள்ள ஒரு கிராமம், இது
ஒரு சிறிய கிராமமாயினும் பல கிராம நகரங்களின் இடையே அமைந்திருப்பதால்
பஸ்கள் பல போக்கு வரத்துகளுக்கு ஜங்ஷன் போல் அமைந்திருக்கிறது.
பெல்காமிலிருந்து பூனா செல்லும் பாதையில் ராயபாக் ஒரு ரயில்வே
ஸ்டேஷனாகவும் இருக்கிறது. எனவே, இக்கிராமம் பலவித வியாபார ஸ்தலமாகவும்
விளங்குகிறது. இக்கிராமத்திலேயும் கோலாப்பூர் மடத்தின் கிளை மடம்
இருக்கிறது. இம்மடமும் கம்பீரமாகக் கட்டப்பெற்றுள்ளது. பெல்காம் போலவே
இம்மடமும் கருங்கற்களாலும், மண்ணாலும் கட்டப்பட்டு எழிலுடன்
விளங்குகிறது. ஒர மூலையில் இடிந்துவிட்டது. எனினும் மடத்தின் மற்ற
பாகங்கள் நல்ல நிலையில் இருக்கின்றன. தற்போதுள்ள நமது கோலாப்பூர்
சந்நிதானம் அவர்கள் இம்மடங்களைப் புதுப்பிக்க ஏற்பாடு செய்து
கொண்டுள்ளார்கள். இவ்வூரில் நமது சமயத்தவர் வீடுகள் நாற்பத்தைந்து
இருக்கின்றன. இம்மடத்தைச் சார்ந்த கோயில்கள் இரண்டு இருக்கின்றன.
மடத்தின் பக்கத்திலேயே மிகப் பழமைவாய்ந்த ஆதிநாதர் கோயில் ஒன்று
இருக்கிறது. இக்கோயிலின் மூலஸ்தானத்திலுள்ள ஆதிநாதர் சிலை சடையுடன்
செதுக்கப்பெற்றுள்ளது. பகவானின் திருவுருவம் கண்ணைக் கவரும்
காட்சியுடன் விளங்குகிறது. உள்ளே மகாவீரர், பார்ஸ்வநாதர் சிலைகளும்
இருக்கின்றன. இவ்வாலயம் சுமார் 1000 ஆண்டுகட்கு முற்பட்டதாக
இருக்கலாம். சிறந்த சிற்ப வேலைப்பாடுகள் அமைந்தவை. இக்கோயில் ஸ்ரீமதி
ரோகதேவி என்னும் ஜைன ராஜகுமாரியால் கட்டப்பெற்று பிரதிஷ்டைச்
செய்ததாகக் கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. மத்திய காலத்தில் ஏற்பட்ட
கலகங்களால் உள்மதிலின் அழகிய சிற்பங்கள் உடைக்கப்பட்டுள்ளன. அதனால்
ஆலயத்தின் இயற்கையழகு மங்கிவிட்டது. சுமார் 300 ஆண்டுகட்கு முன்னர்
இக்கோயிலை ஜீரணோத்தாரணம் செய்து சிதறுண்ட சிற்பங்களின் மேல்
சுவர்வைத்து மூடியுள்ளார்கள். கோயிலின் உட்புறம் மிக அழகாக இருக்கிறது.
சிறிய கோயிலாயினும் அமைதியுடன் விளங்குகிறது.
கோட்டைக் கோயில்:
ராயபாக் மடத்திலிருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில் மகாவீர வர்த்தமான
சுவாமியின் கோயில் ஒன்று ஒரு குன்றின் மேல் அழகாகக் காட்சி அளிக்கிறது.
இக்கோயிலை கட பஸ்தி அதாவது கோட்டைக்கோயில் என அழைக்கின்றனர்.
ராயபாக்கிலுள்ள ஆதிநாதர் கோயிலைக்கட்டிய ஸ்ரீமதி ராஜகுமாரி ரேகாதேவியின் அரச பரம்பரை மன்னர்களே இக்கோயிலைக் கட்டியிருக்க
வேண்டும். இக்குன்றைச் சுற்றி மதில் சுவர்களும் எழுப்பட்டுள்ளன.
அம்மதில்கள் சிதைந்துவிட்டனவாயினும் கோயில் நல்ல நிலையில் இருக்கிறது.
இக்கோயிலும் நமது மடத்தின் பாதுகாப்பிலேயே இருக்கின்றது. தினந்தோறும்
பூஜையும் தவறாமல் நடந்துவருகிறது.
ராயபாக் ஜைனப் பெருமக்கள்:
நமது மடத்தைச் சார்ந்த ஜைனப் பெருமக்கள் ராயபாக்கில் 45
குடும்பங்களும், இதனைச் சுற்றியுள்ள சுமார் 50, 60 கிராமங்களிலும்
வாழ்கின்றார்கள். ராயபாக்கீலுள்ள நமது சமயத்தவர் விவசாயத்துடன் வியாபாரிகளாகவும்
விளங்குகின்றார்கள். நல்ல முயற்சியுடையவர்கள். ராயபாக்கிலுள்ள
கடைகளில் பெரும்பாலும் ஜைனர்களுடையதே யாகும். நமது சுவாமிகளிடம்
பிரியாத
பக்தியும் அன்புமுடையவர்கள். தினந்தோறும் காலையில் அனைவரும்
கோயிலுக்கு வருகின்றார்கள். சுவாமி தா�சனத்தை முடித்துக்கொண்டு
மதகுருவாகிய மடாதிபதி சுவாமிகளையும் பக்தி சிரத்தையுடன் வணங்கிய
பின்னரே வீடு செல்லுகின்றார்கள். நல்ல செல்வந்தர்களும் இவ்வூரில் இருக்கின்றார்கள். இப்பாகங்களிலுள்ள ஜைனப் பெருமக்களும்
மடத்தினிடத்தும், சுவாமிகளிடத்தும் அத்தியந்த
பக்தியுடையவர்களாயிருக்கின்றார்கள். வர்த்தனை, நன்கொடைகளைத் தவறாது
செலுத்தி வருகின்றார்கள்.
தோட்டங்களும், நிலங்களும்:
இம் மடத்தைச் சார்ந்த நிலங்களும் தோட்டங்களும் ஏராளமாக இருக்கின்றன.
கிராமங்களிலுள்ள நிலங்கள் போக ராயபாக்கிலேயே தென்ன மரத்தோட்டமும் வாழை
மரத்தோட்டமும் கரும்பு, கோதுமை, சோளம் விளையக்கூடிய நிலங்களும்
இருக்கின்றன. இத்தோட்டங்களின் இடையே ஒரு பொ�ய கிணறு இருக்கிறது.
தண்ணீர் மிஷின் ஒன்றும் அமைத்துள்ளார். பசுக்களுக்கும் எருதுகளுக்கும்
அத்தோட்டத்திலேயே கொட்டைகள் கட்டப்பட்டுள்ளன. இத்தோட்டங்களையும்,
நிலங்களையும் பார்த்துக்கொள்பவர் நமது தமிழகத்தைச் சார்ந்த வெண்குன்ற
கிராம திரு. சக்கரவர்த்திநயினார் என்னும் இளைஞரே. அவர் உண்மையும்,
ஊக்கமும் உடையவர், சுவாமிகளின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்.
ராயபாக் தோட்டங்கள் நிலங்கள் ஆகியவற்றைப் பயிரிடும் முழு பொறுப்பையும்
அவா�டமும் ஒப்புவித்துள்ளார் நமது சுவாமிகள். மடத்தின் பின் பக்கமும்
ஒர பொ�ய வாழைமரத் தோட்டம் இருக்கிறது.
மூன்று மடங்கள்:
கோலாப்பூர், பெல்காம், ராயபாக் ஆகிய மூன்று மடங்களும் கோலாப்பூர் ஸ்ரீ
லக்ஷ�மிசேன பட்டாராக பட்டாச்சார்யவர்ய சுவாமிகளின்
ஆட்சிக்குட்பட்டவைகளே. கோலாப்பூர் மடம் தலைமப்பீடமாகவும், ராயபாக்
மடமும், பெல்காம் மடமும் கிளை மடங்களாகவும விளங்குகின்றன. ஸ்ரீ
சுவாமிகள் ராயபாக்கில் மூன்று மாதங்களும் பெல்காமில் மூன்று
மாதங்களும், கோலாப்பூரில் ஆறு மாதங்களுமாக முகாம் செய்வார்கள். இம்
மூன்று மடங்களுமாக முகாம் செய்வார்கள். இம்மூன்று மடங்களுக்கும்
கார்பாரிகள் அதாவது தலைமை குமாஸ்தாக்கள் மூவர் இருக்கின்றனர். இவர்கள்
மூவரும் மடத்தின் வரவு செலவு கணக்குகளையும் நிர்வாகங்களையும்
பார்த்துக்கொள்வார்கள். இன்மூன்று மடங்களிலும் ஆண்டு தோறும் சுமார்
பதினைந்தாயிரத்திற்குமேல் இருபதினாயிரம் ரூபாய் வரைவரும்படி வருகிறது.
சில ஆண்டுகளில் பதினைந்தாயிரம் ரூபாக்குள்ளாகவே வருவதும் உண்டு.
இம்மூன்று மடங்களைச்சார்ந்த ஜைனப் பெரும்மக்கள் மடங்களைத் தங்கள்
தங்கள் சொந்த நிலையங்களாகக் கருதுகிறார்கள். ஆங்காங்கு பயிராகும்
விளைபொருள்களை ஆங்காங்குள்ள ஜைனர்கள் அக்கரையுடன் வசூலித்து
அனுப்புகின்றார்கள். செல்வத்தாலும், அறிவாலும், தவ ஒழுக்கத்தாலும்
சிறந்துவிளங்கும் மதகுருவாகிய ஸ்ரீ சுவாமிகளிடம் அவர்கள் கொண்டுள்ள
பக்தியை நேரே கண்டாலன்றி உரைகளால் வருணிக்க இயலாது.
சுவாமிகளின் சுற்றுப்பிராயண வசதிகளுக்காக ஒரு மோட்டார்காரும், ஒரு
குதிரைப்பூட்டும் பெட்டி வண்டியும், இரட்டைக் குதிரைப் பெட்டி
வண்டியும் இருக்கின்றன. மோட்டார்கார் வாங்கிய பின்னர் பெட்டி வண்டிகள்
உபயோகத்தில் இல்லை. சுவாமிகள் எங்கு சென்றாலும் மோட்டாரிலேயே
செல்லுகின்றார்கள்.
பகவான் விருஷபதேவரால் அருளப்பெற்று மகாவீரர் முதலாய இருபத்து நான்கு
தீர்த்தங்கரர்களாலும், தவத்தால் நிறைந்த முனி கணங்களாலும்,
அறவோர்களாலும், அரசர்களாலும் வளர்க்கப்பெற்ற நமது சமய அறநெறிகளைப்
பாதுகாக்கும் பொறுப்பையும், கடமையையும் உடைய நமது பாரதநாட்டுத்
தலைமைப் பீடங்களில் ஒன்றாகிய கோலாப்பூர் மடத்தின் மத குருவாக
விளங்கும் ஸ்ரீ லக்ஷ�மிசேன பட்டாரக பட்டாச்சார்யவர்யசுவாமிகள் இத்தகு
சிறப்புடன் விளங்குகின்றார்கள். அப்பெருமானின் திருவடிகள் என்றும்
வாழ்க, வாழ்க என வாழ்த்தி வணங்குவாம்.
கோலாப்பூர் மடமும், ஜினகஞ்சி மடமும்:
தமிழகத்தின் தலைமைப் பீடமாக அமைந்துள்ள ஜினகஞ்சி மடம் மேல் சித்தாமூரில் இருந்து வருவதை நாம் நன்கு அறிவோம். நமது தமிழக ஜைனமடத்திற்குப்
புதிய மடாதிபதி சுவாமிகளை நியமிக்கத் தமிழக ஜைனப் பெருமக்களின்
அழைப்பினை ஏற்று வழக்கம்போல் கோலாப்பூர் ஸ்ரீ லக்ஷ�மிசேன பட்டராக
பட்டாச்சார்யவர்ய சுவாமிகள் மேல் சித்தாமூருக்கு விஜயம் செய்தார்கள்.
நமது மதிப்பிற்கும், பக்திக்கும் உரிய ஸ்ரீ கொல்லாபுரம் சுவாமிகளின்
அழைப்பிற்கிணங்கி தமிழக ஜைனப் பெருமக்கள் பெரும்பாலோர் 30-7-1956-ம்
தேதி மேல் சித்தாமூர் வந்து கூடினார்கள். அன்று நடந்த ஆலோசனைக்
கூட்டத்திற்குப்பிறகு நமது ஜினகஞ்சி மடத்திற்குத் தலைவராகத்
தேர்ந்தெடுக்கும் பொறுப்பை மேல் சித்தாமூரில் கூடியிருந்த பொதுமக்கள்
அனைவரும் ஏகோபித்து கோலாப்பூர் ஸ்ரீ சுவாமிகளுக்கே அளித்துவிட்டார்கள்.
ஸ்ரீ சுவாமிகளம் ஜைனப்பெருமக்கள் அளித்த பொறுப்பையும், பரம்பரையாக
நடந்துவரும் வழக்கத்தையும் கொண்டு ஜனநாயக முறையில் ஸ்ரீ
சந்திரகீர்த்தி சாஸ்திரியர் அவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.
சுவாமிகளின் தீர்ப்பை அங்கு கூடியிருந்த அத்தனைமக்களும் ஆரவாரத்துடன்
ஏற்று 'ஜே' கோஷம் செய்து தங்கள் மகிழ்ச்சியைத் தொ�வித்துக்கொண்டார்கள்.
எக்காரணத்தாலோ சிலர் திடீரென மாறி ஸ்ரீ சந்திரகீர்த்தி சாஸ்திரியார்
அவர்களுக்குப் பட்டம் சூட்டுவதை நிறுத்த வேண்டுமென கடலூர் கோர்ட்டில்
தடைஉத்திரவுகோரி வழக்குத் தொடுத்தார்கள். கோர்ட்டார் அவ்வழக்கை விசாரித்துப்
பட்டம் சூட்டுவதை நிறுத்தவேண்டிய அவசிய மில்லையெனத் தீர்ப்பு
அளித்தார்கள் இவ்வெற்றிச் செய்தியை அறிந்து பொதுமக்கள் ஆராவாரத்துடன்
சித்தாமூர் சென்றார்கள்.
தமிழகத்தினின்றும் விஜயம் செய்திருந்த ஜைனப் பெருமக்கள் பலர் சூழ
24-9-1956 ஸ்ரீ சந்திரகீர்த்தி சாஸ்திரியார் அவர்களுக்குக் கோலாப்பூர்
ஸ்ரீ லக்ஷ�மிசேனபட்டராக பட்டாச்சார்யவர்ய சுவாமிகள் பட்டம்
சூட்டினார்கள். பொதுமக்கள் பலரும் 'ஜே' கோஷம் செய்து
மேளவாத்தியங்களுடன் ஜினகஞ்சி புது மடாதிபதி சுவாமிகளாகிய ஸ்ரீ லக்ஷ�மிசேன
பட்டராக பட்டாச்சார்யவர்ய சுவாமிகளை ஊர்வலமாக அழைத்துச்சென்று
சிம்மாதனத்தில் அமர்த்திச் சிறப்புச் செய்தார்கள். இவ்வைபவத்தில்
கலந்துகொண்ட அத்தனை மக்களும் புதியமடாதிபதி சுவாமிகளையும், ஸ்ரீ
கோலாப்பூர் சுவாமிகளையும் நமோஸ்து செய்து அவ்வறவோர்களின் ஆசியைப்
பெற்று மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்கள்.
மேல் சித்தாமூர் அறநிலையத் தீபாவளிப் பிரகடனம்:
நமது ஜினகஞ்சி புதிய மடாதிபதி ஸ்ரீ சுவாமிகள் பட்டத்திற்கு வந்ததும்
மகாவீர வர்த்தமான சுவாமிகளின் 2483ம் ஆண்டு மோக்ஷதினமாகிய தீபாவளியும்
நெருங்கிற்று. நமது சுவாமிகள் இதுதான் சமயம் என அறிந்து நமது சமய்
சேவைக்காகத் தாம் பல்லாண்டுகளாகச் சிந்தித்துக்கொண்டிருந்த அருபெரும்
திட்டங்களைத் தயார் செய்தார்கள். அவைகளை அச்சிட்டுத் தீபாவளிப்
பிரகடனம் எனும் புனிதப் பெயரால் மடத்தின் வாயிலாகத் தீபாவளி
(2-11-1956) அன்று வெளிட்டார்கள். இதுவரை எந்த மடாதிபதி சுவாமிகளும்
செய்யாத அற்புதச் செயலை நமது புதிய மடாதிபதி சுவாமிகள் செய்தார்கள்
என மக்கள் மனம்
பூரித்து மகிழ்ந்தார்கள். இளைஞர்களும், அறிஞர்களும்
ஆனந்த வெள்ளத்தில் மூழ்கிக் களித்தார்கள். நமது சமய் வளர்ச்சியிலும்,
சமூக நலத்திலும் அக்கரையும் அன்பும் கொண்ட பல பொ�யோர்கள் தீபாவளிப்
பிரகடனத்தைப் பாராட்டியும், வரவேற்றும் சுவாமிகளின் அரும்பெரும் சேவா
உணர்ச்சியைப் புகழ்ந்துப் கடிதங்கள் வரைந்து தங்கள் மகிழ்ச்சியைத்
தொ�வித்துக்கொண்டார்கள். சமூக நலனுக்காகவோ சமய வளர்ச்சிக்காகவோ
சேவைசெய்யும் போது, சுவாமிகளுக்கு உறுதுணையாக இருந்து பயனுள்ள
காரியங்களைச்
செய்து வெற்றி காண்பதே சீடர்களின் கடமையாகும். உண்மையில் சமய
வளர்ச்சிக்கு நன்மை செய்தவராவோம். அதைச்செய்யவேண்டும், இதைச் செய்ய
வேண்டும் என ஆக்கவேலையில் போட்டியிடுபவர்களே உண்மையும், நேர்மையும்
உள்ள தொண்டர்கள், எனும் ஒரு அறிஞா�ன் பொன்மொழிக் கேற்ப இன்று பல
அறிஞர்களும் இளைஞர்களும் நமது சுவாமிகளின் பிரகடனத் திட்டங்களை
நிறைவேற்றுவதில் ஊக்கங்கொண்டு துடிக்கின்றார்கள். எனவே நமது
சமயவளர்ச்சிக்கான இன்றியமையாத நற்பணிகளைச் செய்ய நாமனைவரும் ஒன்றுபட
வேண்டும். அதுதான் அறிவுடைமையாகும். உலகமும் நம்மைப்போற்றும்.
கோலாப்பூர் ஸ்ரீ சுவாமிகளின் புறப்பாடு:
கோலாப்பூர் ஸ்ரீ லக்ஷ�மிசேன பட்டராக பட்டாச்சார்யவர்ய சுவாமிகள்
ஜினகஞ்சி மடத்துப் பட்டம்சூட்டு விழாவிற்குப் பின்னர், முதலூர்,
உப்புவேலூர், பேராவூர், கள்ளகொளத்தூர், விழுக்கம், திண்டிவனம்,
மலையனூர் தாயனூர், பெருமண்டூர், வீடூர், ஆலக்கிராமம், கரந்தை,
திருப்பறம்பூர், வெண்பாக்கம், காஞ்சீபுரம், சென்னை, ஆகிய பலகிராம,
நகரங்களுக்கு விஜயம் செய்தார்கள். ஆங்காங்குள்ள ஜைனப்பெருமக்கள் ஸ்ரீ
சந்நிதானம் அவர்களை உள்ளன்போடு வரவேற்றும், வரவேற்புத்தாள்கள்
வாசித்தளித்தும் தங்கள் குருபக்தியையும், சமய பற்றையும் காட்டி
மகிழ்ந்தார்கள். ஸ்ரீ சுவாமிகளின் அறவுரைகள் மக்கள் உள்ளத்தை ஈர்த்தன.
அரிய பொ�ய ஆன்ம தத்துவங்களைச் சாதராண மக்களும்
புரிந்து கொள்ளும்
வண்ணம் பல மேற்கோள்களுடன் விளக்கிப்பேசி மக்கள் உள்ளத்தில் பதிய
வைத்தார்கள். அதனால் அறிவுசான்று சுவாமிகளின் அறவுரைகளைக் கேட்க
மேலும் பல கிராம ஜைனப்பெருமக்கள் விழைந்தனர். ஆனால் சுவாமிகள்
தமிழ்நாடு விஜயம் செய்து ஐந்துமாதங்களுக்கு மேல் கடந்து விட்டதால்
கோலாப்பூர் மடத்தின் சம்பந்தமான பல பொறுப்புள்ளப் பணிகளைச்
செய்யவேண்டி சுவாமிகள் புறப்பட வேண்டிய அவசிய மேற்பட்டது. எனவே,
கோலாப்பூர் ஸ்ரீ லக்ஷ�மிசேன பட்டாரக பட்டாச்சார்யவர்ய சுவாமிகள்
ஜினகஞ்சி ஸ்ரீ லக்ஷ�மிசேன பட்டாரக பட்டாச்சார்யவர்ய சுவாமிகள் பாலும்,
தமிழ் நாட்ட ஜைனப் பெருமக்களிடமும் கோலாப்பூர் ஸ்ரீ சுவாமிகளை அனுப்ப
மனம் வராவிடினும் அங்குள்ள அறப்பணியின் காரணமாகச் சுவாமிகளின்
திருவடிகளை வணங்கி வாழ்த்திச் சிறப்புடன் வழியனுப்பினார்கள்.
சென்னையில் வரவேற்புக் காட்சியும், வழியனுப்பு வைபவமும்:
கோலாப்பூர் ஸ்ரீ சுவாமிகள் சென்னை விஜயம் செய்தார்கள். சுவாமிகளின்
வரவை அறிந்த சென்னை ஜைனப் பெருமக்கள் குஜராத்தி ஜெயின் மண்டபத்தில்
சுவாமிகளுக்கு வரவேற்பளிக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். அவ்வாறே
23-12-1956தேதி ஸ்ரீ சுவாமிகளைப் பாண்டு (Band) வாத்தியங்கள் முழங்க
'ஜே' கோஷங்களுடன் சிறப்பாக குஜராத்தி ஜைன மண்டபத்திற்கு ஊர்வலமாக
அழைத்துச் சென்று ஹிந்தியிலும் தமிழிலும் இரு வரவேற்பு வாழ்த்துரைகள்
வாசித்தளித்தார்கள். ஸ்ரீ சுவாமிகளும் வரவேற்புகளுக்குப் பாராட்டு
நல்லுரை வழங்கினார்கள். சென்னை வடநாட்டு ஜைனப் பெருமக்களின்
அழைப்பிற்கிணங்கி செளக்கார்பேட்டை ஜெயின் கோயிலில் சுவாமிகள் ஹிந்தி
மொழியில் அரியதோர் சொற்பொழிவாற்றினார்கள். சுவாமிகளின் அறவுரைகளைக்
கேட்ட வடநாட்டு ஜைனப் பெருமக்கள் பெருமகிழ்ச்சிக் கொண்டார்கள். சேத்
லால் சந்த்ஜி டாடா அவர்களும், சேத், ரத்தன்சந்த், கபூர்சந்த்ஜீ
அவர்களும், சேத் புக்ராஜ் அவர்களும், சுவாமிகளைப் பலப்படப்புகழ்ந்து
வாழ்த்தி வணங்கினார்கள். பின்னர் இரவு 7-மணிக்கு சுவாமிகள்
இரயிலுக்குப் பயணமானார்கள். ஸ்ரீ சுவாமிகளை வழியனுப்பத் திண்டிவனம்,
பெரும்புகை, விழுக்கம், மேல் சித்தாமூர், வீடூர், ஆலக்கிராமம்,
இளமங்கலம், உப்புவேலூர், கரந்தை, திருப்பறம்பூர், வெண்பாக்கம்,
காஞ்சீபுரம் ஆகிய கிராம நகரங்களிலிருந்து வந்திருந்த ஜைனப் பெருமக்கள்
சுவாமிகளின் பொன்னடிகளைப் போற்றி வழியனுப்பினார்கள். இரயில்
நிலையத்திற்கும் பொறுப்புள்ள பல பொ�யோர்கள் வந்திருந்த 'ஜே'
கோஷத்துடன் சுவாமிகளை வணங்கி வாழ்த்தினார்கள். சுவாமிகளும்
உள்ளன்புடன் வாழ்த்துக்கூறி புறப்பட்டார்கள். சுவாமிகளைத் தமிழகம்
அழைத்துவரசீடர்கள் கோலாப்பூர் சென்றிருந்ததுபோன்று சுவாமிகள்
கோலாப்பூர் செல்லும் வரை உடன் சென்று ஆசிபெற்று வருவதுதான் முறைமையும்,
கடமையுமாகும். எனவே, சுவாமிகளுடன் கோலாப்பூர் வரை சென்று வரும்
பாக்கியம் எனக்கும் திண்டிவனம் தனலக்ஷ�மி விலாச ரைஸ்மில்
உரிமையாளர்
திரு. பூபால நயினார் அவர்களுக்கும் கிடைத்தது. எனவே யாங்களிருவரும்
சுவாமிகளுடன் சென்றோம். சுவாமிகள் வரவை அறிந்து பெங்களுர் பெல்காம்,
ராயபாக் முதலிய நகரங்களின் இரயில் நிலையத்தில் சுவாமிகளை வரவேற்கக்
கூடியிருந்த ஜைனப் பெருமக்களின் ஆர்வத்தையும், குரு பக்தியையும் நேரே
கண்டு ஆனந்தித்தோம். சுவாமிகளுக்கு ஆங்காங்கு நடைபெற்ற வரவேற்புச்
சிறப்புகளையும் பக்தி சிரத்தையையும் எழுத்துக்களால்
எழுதிக்காட்டவியலாது. எனவே சுவாமிகளுடன் சென்ற யாங்கள் அங்கிருந்த
இரண்டு மூன்று நாட்களிலும் மலருடன் சேர்ந்த நாறும் மணம் பெறுவது
போன்று எங்களுக்கும் பல விருந்துகளும் வாழ்த்துக்களும் கிடைத்தன. ஸ்ரீ
சுவாமிகளும் எங்களை ஒவ்வொரு வினாடியும் விசாரித்து உபசா�த்து
வந்தார்கள். சுவாமிகள் எங்கள்பால்கொண்ட அன்பு தமிழக ஜைனப் பெருமக்கள்
பால்கொண்ட பேரன்பாகும். யாங்கள் கோலாப்பூர் சென்று வரவும்.
ஆங்காங்குள்ள கோயில்களையும், மடங்களையும், தோட்டங்களையும், மற்றும்
பலமுக்கிய வரலாற்றிடங்களையும் பார்த்துவர மோட்டார்காரையும், கார்பாரியையும்
திரு. சக்கரவர்த்தி அவர்களையும் அனுப்பி உதவினார்கள் இத்தகைய
வசதிகளால் யாங்கள் பலவிடங்களில் நேரே சென்று கண்டவற்றையும்,
கேட்டவற்றையும் கொண்டே இச்சிறுநூல் எழுதப்பெற்றது. இக்குறிப்புகளை
சுவாமிகளிடமும் படித்துக் காண்பித்தேன். சுவாமிகளும் வியப்புற்று
இரண்டு நாட்களில் கோலாப்பூர் மடத்தின் வரலாற்றைமட்டுமல்லாமல்
மகாராஷ்டிரத்து ஜைன சமயவரலாற்றையும் எவ்வாறு சேகா�த்துவிட்டீர்கள்
எனப்புகழ்ந்து வாழ்த்தினார்கள். இவைகள் யாவும் சுவாமிகளின்
ஆசீர்வாதத்தால் பெற்ற பாக்கியம் எனக்கூறி சுவாமிகளின் திருவடிகளை
வணங்கி சென்னை செல்ல அனுமதி கேட்டோம். சுவாமிகள் எங்களிருவரையும்
மனமார வாழ்த்திப் பல சிறப்புக்களுடன் வழியனுப்பினார்கள். மேலும்
கூறுகையில் தமிழக ஜைனப் பெருமக்கள் பலரும் தங்களுக்குள் ஏற்பட்டப்
பகைமை உணர்ச்சியைமறந்து ஒன்று படவேண்டுமென விழைக்கின்றேன், என
ஆசிகூறினார்கள்.
கோலாப்பூர் ஸ்ரீ சுவாமிகள் திருவடிகள் வாழ்க.
ஜினகஞ்சி ஸ்ரீ சுவாமிகள் திருவடிகள் வாழ்க
"திருவறம் வளர்க"
"எங்குள அறத்தினோறாம் இனிதூழி வாழ்க."